விருதுநகர் தொகுதியில் அருப்புக்கோட்டை, சிவகாசி திருமங்கலம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் மதியம் வரையில் முன்னிலையில் இருந்தார். திமுக சார்பில் மாணிக்கம் தாகூர் 3,74,473 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியை உறுதி செய்தார்.
Virudhunagar Lok Sabha Election Results 2024: நடந்து முடிந்த 18ஆவது மக்களவை பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத் தேர்தலில் ஏப். 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி நாடு முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளன.
இந்த 39 தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாகவும் கவனமாகவும் செய்து வருகின்றது. இந்நிலையில் இந்தத் தொகுப்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நிலவரம் குறித்தும், விழுப்புரம் மக்களவைத் தொகுதி கள நிலவரம் எப்படி இருந்தது என்பது குறித்தும் காணலாம்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி
தென் தமிழ்நாட்டின் வறண்ட பகுதியான விருந்துநகர் தொகுதி இந்த முறை ஸ்டார் தொகுதியாக அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 34ஆவது தொகுதியான விருதுநகர் தொகுதி வறண்ட பூமி என்பதால் பெருமளவு விவசாயம் அல்லாமல், தீப்பெட்டி, பட்டாசு பிரிண்டிங் என சிறு தொழில்களை அப்பகுதி மக்களின் முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளது. காமராஜர் பிறந்த மண் எனும் சிறப்பினைக் கொண்டது.
தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் சிவகாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு விருதுநகர் மக்களவைத் தொகுதி உருவான நிலையில், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 6 தொகுதிகளில் 2 தொகுதிகளை அதிமுகவும், இரண்டு தொகுதிகளை திமுகவும், மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு தொகுதிகளையும் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கைப்பற்றி எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ளனர்.
வாக்காளர்கள் விவரம் 2024:
விருதுநகர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் - 7,28,158 பேர்
பெண் வாக்காளர்கள் - 7,63,335 பேர்
மூன்றாம் பாலினத்தவர் - 202 பேர்
இவர்களில் நடந்து முடிந்த 2024 வேலூர் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்கள் மொத்தம் 10,54,634 பேர். அதாவது 70.22 விழுக்காடாகும்.
காங்கிரஸ் Vs நட்சத்திர வேட்பாளர்கள்
தொகுது மறுசீரமைப்புக்குப் பின் நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் காங்கிரஸூம், ஒரு முறை அதிமுகவும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார்.
இந்நிலையில், இந்த முறை மீண்டும் திமுக சார்பில் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக சார்பில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் ஆகியோர் உள்பட 31 வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர்.
ராதிகா சரத்குமார், விஜய பிரபாகரன் ஆகியோரால் ஸ்டார் தொகுதியாக விருதுநகர் கவனமீர்த்துள்ள நிலையில், காமராஜர் மண்ணான விருதுநகரில் 2009, 2019ஆம் ஆண்டுகளில் வெற்றி பெற்ற காங்கிரஸின் மாணிக்கம் தாகூருக்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்பட்டது. இத்தகைய சூழலில் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.