விழுப்புரம்: அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என மோடி பேசியதை, அவர் எதற்காக பேசினார் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருப்பதினால் அதற்கான தகுந்த பாடத்தினை தேர்தலில் மக்கள் புகட்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக வேட்பாளர் ரவிக்குமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். விழுப்புரம் தனி தொகுதியில் 25 சுற்றுகள் இன்று எண்ணப்பட்டதில் விசிக வேட்பாளர் 4,77,033 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் 4,06,330 வாக்குகளும் 


பாமக முரளி சங்கர்181882 வாக்குகளும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம் 57242 வாக்குகளும் பெற்றனர். விசிக வேட்பாளர் ரவிக்குமார் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ்யை விட 70,703 வாக்குகள் அதிகமாக பெற்று ரவிக்குமார் வெற்றி பெற்றார். இதனையடுத்து தேர்தல் அலுவலரிடமிருந்து தேர்தல் வெற்றிக்கான சான்றிதழை ரவிக்குமார் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் பெற்று கொண்டார்.


அமைச்சர் பொன்முடி பேட்டி


அதனை தொடர்ந்து பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி வாக்களித்த நன்றியை தெரிவிப்பதாகவும் நாப்பதும் நமதே என்று கூறியது போல் 40 தொகுதிகளிலும் திமுகவும் தோழமை கட்சிகள் வெற்றி பெற்று இருப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என்றும் மீண்டும் ரவிக்குமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவிக்குமார் வெற்றி பெற்றுள்ளது ரவிக்குமாரின் எழுத்து திறமைக்க கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து பேசிய அவர், மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தந்த அனைவருக்கும் வாக்காளர்க்களுக்கும் நன்றியை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சமூக நீதி கொள்கைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து சமூக நீதி ஆட்சிக்கு உறுதுணையாக இருப்பார். ரவிக்குமார் தொடர்ந்து பணியாற்றி சாதனைகளை செய்து தருவார் என்றும் பாஜக எந்த அளவிற்கு நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டுமென்று எக்சிட் போல் என்ற பெயரில் என்னன்னமோ செய்து அவர்களுக்கு தகுந்த மாதிரி எழுதினார்கள். அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என மோடி பேசியதை அவர் எதற்காக பேசினார் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருப்பதினால் அதற்கான தகுந்த பாடத்தினை தேர்தலில் மக்கள் புகட்டிருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 


ரவிக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


இரண்டாவது முறையாக போட்டியிட வைத்து வெற்றி பெற செய்த ஸ்டாலினுக்கும் திருமாவளவனுக்கு வெற்றிக்கு முதன்மையாக காரணமாக இருந்த அமைச்சர் பொன்முடிக்கும் வாக்காளர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக ரவிக்குமார் கூறியுள்ளார். விழுப்புரம் தொகுதியை மேம்படுத்த உழைக்க வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றியையும் தேர்தலில் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்து பாடுபடுவேன் என தெரிவித்தார்.