விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13 ஆம் தேதி எண்ணப்படுவதால் பனையபுரம் அரசு பள்ளி வாக்கு எண்ணும் மையத்தில், மின்னனு வாக்குபதிவு இயந்திரம் வைக்கும் அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தினை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜீலை 10 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை ஜீலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட  29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தல் 276 வாக்கு சாவடி மையங்களில் நடைபெறுவதால் அங்கு பதிவாகும் மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தில் பனையபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்றடுக்கு  பாதுகாப்போடு வைக்கப்பட்டு எண்னப்படுகின்றன.

 

வாக்கு எண்ணிக்கைக்கும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீலிட்டு பாதுகாப்பாக வைப்பதற்கான அறையினை தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

 


வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றம் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் (Second Level Randomization) நடத்தப்பட்டது. அந்த வகையில், 276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -1, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் 4 என மொத்தம் 1355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளர்.