விழுப்புரம்: இடைத்தேர்தலில் அதிமுக புறகமுதுகிட்டு ஓடி விட்டதால் இத்தேர்தலில் போட்டியிடும் பாமக டெபாசிட் இழக்க வேண்டுமென்றும் பிரதமர் பலமுறை தமிழகத்தில் வந்து பிரச்சாரம் செய்தபோதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். 


விக்கிரவாண்டி  இடைதேர்தல்


விக்கிரவாண்டி அருகேயுள்ள கொசப்பாளையம் கிராமத்திலுள்ள தனியார் பள்ளி மைதானத்தில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து திமுக வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, எம்பி ரவிக்குமார்  தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்பி ரவிக்குமார், இந்தியாவிலேயே மிகச்சிறப்பான வெற்றியை தமிழகத்தில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு வழங்கி இருப்பதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான முன்னறிவிப்பு என்றும் இடைத்தேர்தலில் ஆட்சிக்கு மாற்றம் ஏற்படா விட்டாலும் முதலமைச்சரின் திட்டங்களுக்கான சாதனையாக இடைத்தேர்தல் வெற்றி இருக்க வேண்டும் என தெரிவித்தார்.


வாட்சப் DPயில் அன்னியூர் சிவா விசிக தலைவர்


இடைத்தேர்தலில் அதிமுக புறகமுதுகிட்டு ஓடி விட்டதால் இத்தேர்தலில் போட்டியிடும் பாமக டெபாசிட் இழக்க வேண்டுமென்றும் பிரதமர் பலமுறை தமிழகத்தில் வந்து பிரச்சாரம் செய்தபோதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை பத்திற்கு மேற்பட்ட இடங்களில் டெபாசிட் வாங்கவில்லை என தெரிவித்தார். விசிகவிற்கு இரண்டு இடங்களில் போட்டியிட வைத்து தேர்தலில் அங்கீகாரம் வாங்கி கொடுத்த முதல்வருக்கு நன்றி செலுத்தும் விதமாக திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்யவேண்டும் என்றும் இடைத்தேர்தல் முடியும் வரை விசிகவினர் வாட்சப் DPயில் அன்னியூர் சிவா விசிக தலைவர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.