வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா வெற்றி பெற்றுள்ளார். அவரது வெற்றிக்கு கட்சித் தொண்டர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சோஷியல் மீடியாவிலும் திருநங்கை கங்காவின் வெற்றிக்கு பலரும் வாழ்த்துகளை குறிப்பிட்டுள்ளனர்.  மாநகராட்சி 37வது வார்டு திமுக வேட்பாளர் கங்கா 2131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  


திருநங்கை ஆர்.கங்கா. ..


வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் திமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்தது அக்கட்சி. இதில் வேலூர் ஓல்டு டவுன் பகுதி 37- வது வார்டு வேட்பாளராக திருநங்கை ஆர்.கங்காவும் அறிவிக்கப்பட்டார். 


திருநங்கை ஆர்.கங்கா திமுக உறுப்பினராக இருந்த போதும் இந்த தேர்தலில் தான் போட்டியிட விருப்ப மனுவை அளித்துள்ளார். இதனை ஏற்ற திமுக தலைமை அவருக்கு வாய்ப்பு கொடுத்தது. இதனையடுத்து வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் தனக்கான, தன் சமூகத்துக்கான பயணத்தை தொடங்கினார் திருநங்கை கங்கா. வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையோடும், பல்வேறு தொலை நோக்கு சிந்தனையோடும் தேர்தல் களம் கண்ட கங்கா தற்போது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளார்.  


இது குறித்து அப்போது பேசிய, '' தி.மு.க சார்பில் வேலூர் மாநகராட்சி 37-வது வார்டில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தேன். இதனை பரிந்துரை செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு அளித்தார். எங்கள் மாவட்டத்தில் மட்டும் இன்றி தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் திருநங்கைகளுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தமைக்கு நன்றி என்றார். மேலும், இந்த வார்டில் அதிக வாக்கு வாங்கி வெற்றி பெற்று அதை முதல்வருக்கு சமர்பிப்பேன் என்றார். அதேபோல தற்போது வெற்றி பெற்றுள்ளார்.




>> ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!