கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் போட்டியிடும் திமுக உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்தார். திறந்தவெளி வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்து அவர் பேசிய போது, அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது உதயநிதி பேசியதாவது: 




‛‛ஆட்சி அமைத்த 8 மாதத்தில் 9 கோடி கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டுள்ளோம், அதனால் தான் 3வது அலையை அபாயமின்றி கடந்திருக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஒமைக்ரானை எளிதாக வென்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம், ஸ்டாலின் ஆட்சி தான். ஒவ்வொரு அமைச்சரும், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் களத்தில் இறங்கி வேலை பார்த்ததால் தான், அது சாத்தியமானது. 


அதுமட்டுமின்றி தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளை கிட்டத்தட்ட 50 சதவீதத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த உரிமையில் தான் மக்களிடம் சென்று உதயசூரியனுக்கும், திமுகவிற்கும் வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறேன். மகளிருக்கு இலவச பஸ் பயணம் தருவாக கூறினார், செய்தாரா இல்லையா? கொரோனா நிவாரணத் தொகை 4 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார், அதையும் 2 தவணையாக கொடுத்துவிட்டோம். ஆவின் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறினார், செய்தார். பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பதாக கூறி, முதற்கட்டமாக செய்து முடித்தார்.  இப்படி சொல்லியதை எல்லாம் செய்திருக்கிறோம். இப்படிப்பட்ட நல்லாட்சிக்கு மக்களிடத்தில் நல்ல பெயர் உள்ளது. இந்தியா முழுவதும் திரும்பிப் பார்க்கும் நல்லாட்சி நடக்கிறது. 


வடஇந்தியாவில் இருந்து வரும் பத்திரிக்கையில் சர்வேயில், தமிழ்நாடு முதல்வர் தான் முதன்மையானவராக இருப்பதாக கூறியுள்ளனர்,’’ என்று அவர் பேசிக்கொண்டிருந்த போது, 


‛75 சதவீதம் என்கிறார் ஸ்டாலின்... 50 சதவீதம் என்கிறார் உதயநிதி’ எத்தனை சதவீதம் வாக்குறுதியை நிறைவேற்றியது திமுக?


கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் குறிக்கிட்டார்...


‛பெண்களுக்கு மாதம் ரூ.1000 என்னாச்சு...?’ என்று உதயநிதியிடம் கேட்டார். அதை எதிர்பார்க்காத உதயநிதி, ‛என்னது...’ என்று அவரிடம் கேட்டார். அவருக்கும் பதிலுக்கு அந்த கேள்வியை நினைவூட்ட... ‛கொடுத்துடுவோம்... இன்னும் 4 வருசம் இருக்குல்ல...’ என அவருக்கு பதிலளித்தார். 


பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசும் போது, ‛திமுக இருக்கும் வரை நீங்கள் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது,’ என மோடியை பார்த்து பேசியுள்ளார். என்று பிரச்சாரம் செய்தார். 


இதோ உதயநிதியின் அந்த பிரச்சார வீடியோ...






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண