நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 27 பேரூராட்சிகளை கைப்பற்றி உள்ளது.



சேலம் மாவட்டத்தில் மொத்த இடங்கள் 699


தி.மு.க - 421


அ.தி.மு.க 147


பா.ம.க - 27


தேமுதிக - 1


பாஜக - 3


காங்கிரஸ் 17


கம்யூனிஸ்ட் - 5


விடுதலை சிறுத்தை - 3


சுயேச்சை - 75


சேலம் மாநகராட்சி பொருத்தவரை திமுக சார்பில் போட்டியிட்டார் 47 இடங்களில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு 7 இடங்கள் மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் திமுக கூட்டணி 50 வார்டுகளில் வெற்றி பெற்று சேலம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. 



சேலம் மாநகராட்சி மேயராக திமுக வேட்பாளர்கள்


2 வது வார்டில் போட்டியிடும் பன்னீர்செல்வம், முன்னாள் துணை மேயராக இருந்த இவர் 4,937 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க செய்துள்ளார்.


15 வது வார்டு போட்டியிட்ட உமாராணி, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்ற இவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான நண்பர். 


26 வது வார்டில் போட்டியிட்ட கலையமுதன், மூத்த அரசியல்வாதியான இவர் சட்டமன்ற தேர்தலில் சேலம் மாநகராட்சியில் திமுக வெற்றி பெறுவதற்கு அதிக காரணம் இவரே என்பதால் இவருக்குப் மேயர் ஆவதற்கு அதிக தகுதிகள் உள்ளதாக திமுக வட்டாரங்கள் பேசுகிறது.


28 வது வார்டில் போட்டியிட்ட ஜெயகுமார், திமுக சேலம் மாநகர துணை செயலாளரான இவர், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.


6 வது வார்டில் போட்டியிட்ட ராமச்சந்திரன், திமுகவின் மூத்த நிர்வாகியான இவர் 3,869 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து அதிமுகவில் போட்டியிட்ட வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்துள்ளார். சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரனின் வலதுகரமாக இருந்த இவருக்கு வாய்ப்பு குறைவாக இருந்தாலும் மூத்த நிர்வாகி என்பதால் வாய்ப்பு தரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவர்கள் 5 பேரும் மேயர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலை இருந்தாலும் சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் கே.என்.நேரு கை காட்டுபவர்களுக்கு மேயர் பதவி கொடுக்கப்படும்.