சென்னையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில்  மதியம் 1 மணி நிலவரப்படி 23.42 % வாக்குப்பதிவு மட்டுமே பதிவாகியிருக்கிறது.  இது குறித்து அவர் கூறும் போது, “சென்னை ஒரு பெரிய நகரம். அதனால் காலை எப்போதுமே வாக்குப்பதிவு குறைவாக இருக்கும். மதியத்திற்கு பிறகு, வாக்குப்பதிவு அதிகமாகமாகும். சென்னையில் கடந்த 2011 ஆம் ஆண்டில் வாக்குப்பதிவு சராசரியாக 48 சதவீதமாக இருந்தது.


என்ன காரணம்?


இந்த நேரத்தில் எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், எல்லோரும் தங்களது ஜனநாயக கடமையை நிச்சயம் செய்ய வேண்டும். காரணம் இன்று நீங்கள் உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளருக்கு வாக்களித்தால் மட்டுமே பின்னாளில்  அவரிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேள்வி கேட்க முடியும்.  இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. 5 மணிவரை வாக்களிக்க முடியும். செல்லுங்கள்.


சென்னையில் வாக்குப்பதிவு  நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகவே இருக்கிறது.மக்களிடம் விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் சோம்பேறித்தனத்தால் சிலபேர் வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். இதுவரை 30 புகார்கள் வந்துள்ளன. எல்லாமே சின்னசின்னச் புகார்கள்தான். பெரிய புகார்கள் எதுவும் இதுவரை வரவில்லை. காவல்துறையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துமீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது."  என்று பேசினார். 


காலையில் இருந்தே மந்தமான வாக்குப்பதிவு 


தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் வாக்குப்பதிவு காலையிலிருந்து மந்தமாகவே இருந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வந்தது. 


இந்நிலையில், காலையிலிருந்தே சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாகவே  காணப்படுகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் காலை 9 மணி நிலவரப்படி 3.96% சதவீதம் வாக்குகளே பதிவாகின சென்னையில் முன்பெல்லாம், வாக்களிக்க வரும்போது வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிப்பார்கள். ஆனால், வாக்குச்சாவடிக்கு வந்த வாக்காளர்கள் வரிசையில் நிற்கும் அளவிற்கு கூட இல்லாமல், வந்து 5 நிமிடத்தில் வாக்களித்து சென்றுவிடுகின்றனர். 


தலைநகர் சென்னையில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, தமிழ்நாட்டில் சென்னையில் தான் வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருந்தது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மதியம் 1 மணி நிலவரப்படி  23.42 % வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கின்றன. 


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 


இதற்காக தமிழ்நாட்டு முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் 5,960 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளனர். சென்னையில் மூவர் உட்பட 38 மாவட்டங்களில் மொத்தம் 41 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடப்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிடிபில் வீடியோக்களை காண