விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகர்மன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தும் அவர்களை ஆதரித்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் காந்தி சிலை அருகே தேர்தல் பிரச்சார சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போது திமுக அரசு முடக்கி உள்ளன. மேலும், தற்போது ரவுடிகள்தான் திமுகவில் இணைந்து வருகிறார்கள், குறிப்பாக 2006ஆம் ஆண்டு தன்னை கொலை செய்ய முயற்சித்தவர், அந்த வழக்கில் 5 வது குற்றவாளியான நந்தா என்ற கொலை குற்றவாளியை திமுகவில் உறுபினராக சேர்த்துள்ளனர். திண்டிவனம் நகரம் மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் பணிக்கான ஒப்பந்தங்களை கையாடல் செய்தவர் மற்றும் கொலை குற்றவாளியான நந்தாவை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.




மேலும் தனக்கு கொடுக்கப்பட்ட காவல் பாதுக்காப்பை  திமுக ஆட்சிக்கு வந்ததும் விலக்கிவிட்டது. தற்போது கொலைக்காரர்களை உறுப்பினர்களாக்கி மக்களை அச்சுறுத்தி வருகிறது எனவும், தான் பாதுக்காப்புக்காக வைத்திருக்கும் துப்பாக்கி உரிமையை கூட இதுவரை புதுப்பிக்கப் படவில்லை எனவும், காவல் நிலையத்தில் முடக்கி வைத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டினார். கொலையாளியை வேட்பாளராக்கி இருக்கிறீர்கள் என்றால் அதன் பின்னனி என்ன? பாதுகாப்பை விலக்கியதன் நோக்கம் என்ன? துப்பாக்கி உரிமையை பறித்ததற்கான நோக்கம் என்ன? கொலைக்காரனை வேட்பாளராக நிறுத்திய நோக்கம் என்ன என்று தெரிய வேண்டும் என்றும், அதற்காக விரைவில் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அங்கு வந்து ஸ்டாலின்பதில் அளிக்கட்டும்.




அதிமுக ஆட்சியில் காவல்துறையை கண்டால் மரியாதை அச்சம் இருந்தது, ஆனால் தற்போது உள்ள காவல் துறையை சுதந்திரமாக செயல்பட இந்த அரசு விடுவதில்லை. இது ஒரு குடும்ப ஆட்சி, கருணாநிதி குடும்பம் மட்டும் தான் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இந்த திமுக ஆட்சி மக்களுக்காக பாடுப்படுகிற இயக்கம் அதிமுக தான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண


மேலும் படிக்க:திமுகவிற்கு பிரச்சாரம் செய்த ருமேனியா நபருக்கு நோட்டீஸ்: நேரில் ஆஜராக மத்திய அரசு உத்தரவு!