தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழியை ஆதரித்து அமைச்சா உதயநிதி ஸ்டாலின் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு பேசுகையில், திமுகவிற்கு நீங்கள் போடும் ஓட்டு தான் பிரதமர் நரேந்திமோடிக்கு வைக்கும் ஓட்டு கடந்த முறை அத்தை கனிமொழியை 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த தடவை அதிக வாக்கு வித்தியாசத்தில் குறைந்து 5 லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். எந்த கொம்பானாக இருந்தாலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும்.
தவழ்ந்து போய் முதல்வராக பதவியேற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. அவரை முதல்வராக்கிய சசிகலாவை காலை வாரிவிட்டவர்தான் பாதம் தாங்கிய பழனிச்சாமி. சசிகலாவிற்கு மட்டுமல்ல தமிழகம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் துரோகம் செய்தவர் தான் பாதம் தாங்கிய பழனிச்சாமி. இந்த தேர்தல் மற்றும் பிரச்சாரத்தின் பெயர் மாநில உரிமை மீட்பு இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் , சுங்கச்சாவடி அகற்றப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கா - நம்பிக்கை இருக்க வேண்டும் - ஏனெனில் தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவில் கனிமொழி இருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக தொடங்கப்பட்ட திடடம் தான் கலை உணவு திட்டம். அதை போன்று தான் மகளிர் உரிமைத்தொகை திட்டம், விடுப்பட்டவர்களுக்கு சரி செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். 10வருடமாக ஆட்சி புரிந்த பிரதமர் நரேந்திர மோடி ஒரு புல்லையாவது தமிழகத்திற்கு போட்டாரா ? தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் மழையினால் பாதிக்கப்பட்ட போது, முதல்வர், அமைச்சர்கள், கனிமொழி ஆகியோர் பாதிப்புகளை கண்டறிந்து மக்களுக்கு தேவையான வசதிகள், நிவாரணங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்தவர் ஒருவர் பிரதமர் குறித்து பேசினார். அதனை இடைமறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீ கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு போய்விட அப்புறம் என் மேல கேஸ் போடுவாங்க, இனி பிரதமர் நரேந்திர மோடியை அவர் பெயர் சொல்லி அழைக்க வேண்டாம். இனி 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும். பாஜகவினர் வந்தால் இனி மிஸ்டர்.29 எப்படி இருக்கிறார் என்று கேளுங்கள்.
ஒன்றிய அரசுக்கு நாம் ஒரு ரூபாய் கொடுக்கிறோம். ஆனால் நமக்கு அவர்கள் 29 காசுகள் கொடுக்கின்றனர். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகமாக நிதி தருகிறது. யார் அப்பன் வீட்டு காசினை எடுத்து கொடுக்கின்றனர். மழை பாதிப்பு, நிஜம் புயல் பாதிப்பின் போது பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் தமிழகத்திற்கு நீட் வரவில்லை. ஆனால் இறந்த பின்னர் இந்த(அதிமுக) அடிமைக்கூட்டம் கொண்டு வந்துவிட்டது. நீட்டை ரத்து செய்வோம் என்று நெல்லையில் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு மட்டும் தான் தமிழகத்திற்கு வருகிறார். மதுரையில் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதாக ஒரே ஒரு செங்கலை பிரதமர் நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி நட்டு வைத்தனர். அந்த செங்கலை நான் எடுத்து வந்து விட்டேன். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு சொல்லவில்லை. குழந்தைகளை பேன்சி டிரஸ் போட்டிக்கு அழைத்து செல்வது போல வேஷ்டி சட்டை அணிந்து பிரதமர் நரேந்திர மோடி நம்மை ஏமாற்ற பார்க்கிறார். திருவள்ளுவர் திருக்குறளை ஏன் எழுதினோம் என்று நினைக்கும் அளவிற்கு பிரதமர் நரேந்திரமோடி திருக்குறளை கூறி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி இங்கு வீடு எடுத்து தங்கினால் கூட தமிழக மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக தலைவர் தொண்டர்களுக்கு தூக்கம் போய்விட்டதாக மோடி கூறுகிறார். உங்களை தோற்கடித்து தமிழகத்தினை விட்டு உங்களை விரட்டும் வரை தூங்க மாட்டோம் அதிமுக - பாஜக இருவரும் கள்ள உறவு வைத்துள்ளனர். தேர்தலுக்கு பின்னர் இருவரும் இணைந்து விடுவார்கள் ஒன்றிய அரசு கொடுத்த 29காசை வைத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி முதல்வர், நமக்கான ஆட்சி வந்தால் இதைவிட சிறப்பாக செய்ய முடியும்’ என்றார்.