தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலமாக நீடித்து வந்த திமுக-அதிமுக என்ற இருமுனைப் போட்டியைத் தவிடுபொடியாக்கி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிய வரலாறு படைத்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட டிவிபி, இதுவரை இல்லாத வகையில் பெரும் வாக்குச் சதவீதத்தைப் பெற்று தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

Continues below advertisement

எம்.ஜி.ஆர் சாதனையை முறியடித்த விஜய்!

கடந்த 1977-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக, தனது முதல் தேர்தலில் 33.52% வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 50 ஆண்டுகளாக இதுவே ஒரு புதுக்கட்சி பெற்ற அதிகபட்ச வாக்குச் சதவீதமாக இருந்தது. தற்போது, 34.92% வாக்குகளைப் பெற்றுள்ள விஜய், எம்.ஜி.ஆரின் அந்த வரலாற்றுச் சாதனையை முறியடித்துள்ளார்.

பின்னுக்கு சென்ற திராவிட கட்சிகள்:

ஆளுங்கட்சியான திமுக இந்தத் தேர்தலில் 24.19% வாக்குகளை மட்டுமே பெற்று இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 21.21% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதல்முறை வாக்காளர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளே டிவிபி-யின் இந்த இமாலய வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

புதுக்கட்சிகளின் முதல் தேர்தல் சாதனை

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, தனது முதல் தேர்தலிலேயே ஆதிக்கம் செலுத்திய கட்சிகளின் விவரங்கள் இதோ:

கட்சிதொடங்கிய ஆண்டுமுதல் தேர்தல்பெற்ற வாக்குச் சதவீதம்
திமுக1949195714%
அதிமுக1972197733.52%
பாட்டாளி மக்கள் கட்சி198919915.89%
தேமுதிக200520068.38%
தமிழக வெற்றிக் கழகம் 2024202634.92%

வட தமிழகம் மற்றும் கொங்கு மண்டலங்களில் நிலவி வந்த குறிப்பிட்ட கட்சிகளின் ஆதிக்கத்தைத் தகர்த்து, தவெக பரவலான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டிலும் சமமான வாக்குச் சதவீதத்தைப் பெற்றுள்ளது ஒரு மைல்கல்.

சமூக வலைதளங்களின் தாக்கம்:

விஜய்யின் இந்த வெற்றிக்கு களப்பணியுடன், அவரது தொழில்நுட்பக் குழுவினரின் டிஜிட்டல் பிரச்சாரமும் ஒரு முக்கிய காரணம். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் (X) தளங்களில் இளைஞர்களைக் கவர்ந்த 'வெற்றி நிச்சயம்' ஹேஷ்டேக்குகள் தேர்தல் களத்தையே மாற்றியமைத்தன.

"வெற்றி நிச்சயம்" என்ற முழக்கத்துடன் களமிறங்கிய விஜய், தற்போது 108 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்று தமிழகத்தின் அதிகார மையத்தை நோக்கி நகர்ந்துள்ளார். திராவிட அரசியலுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்திய விஜய்யின் இந்தத் தேர்தல் ரிப்போர்ட், தேசிய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.