தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்தலின் முடிவுகள் பலருக்கும் ஆச்சரியத்தையும், பலருக்கும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.

Continues below advertisement

தவெக ஆட்சி:

அரைநூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த திமுக மற்றும் அதிமுக-விற்கு மாற்றாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. இந்த தேர்தலில் பல தொகுதிகளிலும் திமுக-வின் அமைச்சர்கள் பலரையும் தவெக வேட்பாளர்கள் தோற்கடித்தனர். இதுதவிர, பல தொகுதிகளிலும் தவெக - திமுக இடையே கடும் போட்டி நிலவியது.

கம்பத்தில் இறுதிவரை போட்டி:

இந்த தேர்தலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தொகுதிகளில் ஒன்று கம்பம். இந்த தொகுதியில் தவெக சார்பில் ஜெகனாத் மிஸ்ராவும், திமுக சார்பில் ராமகிருஷ்ணனும், அதிமுக சார்பில் ஜக்கையனும் களமிறங்கினர். தபால் வாக்கு தொடங்கியது முதலே தவெக-விற்கும், திமுக-விற்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

Continues below advertisement

751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி:

திமுக வேட்பாளரும், தவெக வேட்பாளரும் மாறி, மாறி முன்னிலை பெற்று வரும் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மொத்தம் நடந்த 25 சுற்றுகளின் முடிவிலும் இந்த பரபரப்பு இருந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணனைக் காட்டிலும் தவெக வேட்பாளர் ஜெகனாத் மிஸ்ரா 751 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 இந்த தேர்தலில் ஜெகனாத் மிஸ்ரா 85 ஆயிரத்து 394 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 84 ஆயிரத்து 643 வாக்குகள் பெற்றார்.  அதிமுக வேட்பாளர் ஜக்கையன் 27 ஆயிரத்து 307 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் அன்புசெல்வி 9 ஆயிரத்து 599 வாக்குகள் பெற்றார். மொத்தம் 20 வேட்பாளர்கள் இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளனர். மொத்தமாக 2 லட்சத்து 10 ஆயிரத்து 574 வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் தபால் வாக்குகள் மட்டும் 2 ஆயிரத்து 843 ஆகும். இதர 2 லட்சத்து 77 ஆயிரத்து 31 வாக்குகள் வாக்கு மையத்தில் பதிவாகியது.

இந்த வெற்றி மூலமாக சட்டமன்ற உறுப்பினராக முதன்முறையாக ஜெகனாத் மிஸ்ரா பொறுப்பேற்கிறார். அவர் கொரோனா காலம் முதலே கம்பம் தொகுதியில் பல்வேறு நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால், அவருக்கு தனிப்பட்ட செல்வாக்குடன் சேர்ந்து விஜய்யின் தவெக வேட்பாளராக களமிறங்கியதால் அவர் வெற்றி உறுதியானது. 

TN Election 2026: கூட்டணி உடையப்போவது கன்ஃபார்ம்! திமுக, அதிமுக-விற்கு டாடா சொல்லப்போவது யார்?