இரண்டு ஆண்டுகளுக்கு மேலான காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வலிமை ரிலீசுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகமெங்கும் இருக்கும் அஜித் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். 3 ஆண்டுகளுக்குப் பின் அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் வலிமையின் தியேட்டர் புக்கிங் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. வியாழனில் தொடங்கி, ஞாயிறு வரை விழாவே இல்லாமல் திருவிழாக்கோலம் பூண்டுவிட்டது தமிழ்நாடு. 


ஒரு வழியாக அஜித்தின் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் ஒருபறம் ஆர்ப்பரிக்க, இன்னொரு புறம் அவர்களை வெறி ஏற்றிக் கொண்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். தினம் தினம் படத்தின் ப்ரொமோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் போனி கபூர். இப்படி வலிமை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினரும் படம் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.




அருண் விஜய், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இயக்குநர் வெங்கட் பிரபு, அவரது தம்பி பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் வலிமை குறித்து பதிவிட்டு வருகின்றனர். நாளைய தினம் கோலாகலக் கொண்டாட்டம் இருக்கப்போவதை சோஷியல் மீடியா உலகம் தற்போது எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.


இது ஷோ டைம் எனக் குறிப்பிட்டுள்ள அருண் விஜய், நான் டிக்கெட் எடுத்துவிட்டேன். நீங்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்






வலிமை படக்குழுவுக்கு வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிவி,