தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சியிலும் காலை முதல் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட பொன்னம்பட்ட பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.




இந்த வார்டில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். மகளிர் வார்டான இந்த வார்டிற்கான வாக்கு எண்ணிக்கையில் காலை முதலே தி.மு.க. வேட்பாளர் பாக்கியம் முன்னிலை வகித்து வந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. கட்சி வேட்பாளர்கள் பின்னிலையில் வகித்து வந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரி மட்டும் கடும் நெருக்கடி அளித்து வந்தார். இதனால், மிகுந்த பரபரபப்பு ஏற்பட்டது.


வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் தி.மு.க. வேட்பாளர் பாக்கியத்தை விட, சுயேச்சை வேட்பாளர் மகேஸ்வரி 3 வாக்குகள் அதிகம் பெற்று திரில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பாக்கியம் 221 வாக்குகள் பெற்றார். ஆனால், அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரி 224 வாக்குகள் பெற்றார். இந்த வார்டில் மொத்தம் 733 வாக்குகள் பதிவாகியது. மொத்தம் பதிவான வாக்குகளில் மகேஸ்வரி, பாக்கியத்திற்கு பிறகு பிச்சையம்மாள் 128 வாக்குகள் பெற்றுள்ளார். இதர வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளே பெற்றனர்.




தமிழ்நாட்டின் முக்கிய நகரமும், கல்வித்துறை அமைச்சர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆகியோரின் சொந்த மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளரை சுயேச்சை வேட்பாளர் தோற்கடித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  


மேலும் படிக்க : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ! 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண