தமிழகத்தில் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இந்தச் சூழலில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பணம் கொடுத்து, ஓட்டு  வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. 


திருச்சி மாநகராட்சி 29வது வார்டில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் கமால் முஸ்தபாவுக்கு ஓட்டளிக்குமாறு, பண பட்டுவாடா செய்கின்றனர். திமுக வட்டப்  பிரதிநிதிகளான அலாவுதீன், ஜாபர், முஸ்தபா ஆகியோர், இந்த வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதிகளில், வாக்காளர்களின் பூத் சிலிப்புகளை வாங்கி, குறித்து வைத்துக் கொண்டு,  500 முதல் 1,000 ரூபாய் வரை பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் பறக்கும் படையினரும் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுக்கின்றனர்.


வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. அதில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வாக்குகள் அனைத்தும் வரும் 22ஆம் தேதி எண்ணப்படுகிறது. அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 4ஆம் தேதி மாநாகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுடன் களமிறங்குகிறது. அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண