மோதிக்கொள்ளும் வனிதா பாலா 


இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வனிதா மற்றும் சுருதி ஆகியோர் விளையாடுகின்றனர். இந்த நிலையில் தற்போது நிகழ்ச்சியிலிருந்து ஒரு புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் “ போன் அடிக்க ஓடிச் செல்கிறார் பாலா,  தொடர்ந்து டபுள் எவிக்‌ஷனுக்கு தயாராகுங்க என்கிறார் பிக்பாஸ்.. அதைத்தொடர்ந்து பேசும் பாலா, நீங்களே உங்களுக்குள்ள கூடி, ஒருத்தர செலக்ட் பண்ணி எவிக்ட் பண்ணலாம் என்கிறார். 


உடனே வனிதா பேசுவது காண்பிக்கப்படுகிறது. அப்போது பேசும் வனிதா, பாலா, வெளியே சப்போர்ட் இருக்கு ஆட்டிடியூட் கண்டிப்பா நான் பார்த்தேன். அதை தொடர்ந்து பேசிய பாலா, இது நான் கொடுத்த டாஸ்க்.. பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் இல்லை.. என்று சிரித்துக்கொண்டு நடந்து செல்கிறார். அதனைத்தொடர்ந்து கொதித்தெழும்வனிதா தி இஸ் நாட் ரைட்.. இந்த வீட்ல என்ன வேணாலும் பண்ணாலாம்னு  நினைக்கிறியா என்று கத்த.. ப்ரோமோ முடிகிறது.  


 



 


என்ன நடக்கிறது வீட்டில்? 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பு, அந்த நிகழ்ச்சியை 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் வகையில் ஓடிடிக்கு அழைத்து சென்றது. ”தோத்த இடத்துலதானே ஜெயிக்க முடியும்” என்ற கேப்ஷனை வைத்து ஒளிப்பரப்பாகும் இந்த சீசன்களில், முந்தைய சீசன்களில் மக்களிடம் கவனம் பெற்று தோற்றப்போன போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். 


அந்தப் போட்டியாளர்களின் பட்டியலில் முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணி, இரண்டாவது சீசனில் இருந்து ஷாரி, தாடி பாலாஜி, மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதா நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோர் பங்கேற்று உள்ளனர். இதில் ஏற்கனவே சுரேஷ் சக்ரவர்த்தியும்,சுஜா வருணியும் எலிமினேட் ஆகியுள்ளனர். 


தற்போது மீதமுள்ள 12 பேருக்கிடையே தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை யன்று கேப் டன்சி டாஸ்க் நடைபெறுவது வழக்கம். இதில் வெல்லும் போட்டியாளர் அடுத்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்க முடியும். இந்த தலைவரை பிற போட்டியாளர்கள் எவிக்ட் செய்ய முடியாது. அந்த வகையில், இந்த வார கேப்டன்சி டாஸ்கில் வனிதா மற்றும் சுருதி ஆகியோர் விளையாடுகின்றனர்.