நடிகைகளின் திருமணம் மீது சமூகத்துக்கு எப்போதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் பெரிதாக குறிப்பிடமுடியாது.


பிரபல நடிகை என்றாலே அவருக்கு இவருடன் காதல் அவருடன் கல்யாணம் என்றெல்லாம் பேச்சுக்கள் வரும். அதுவும் இது இணைய காலம் என்பதால் ஃபோட்டோஷாப் புகைப்படங்கள் வெளியாகி உண்மையிலேயே கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்கும் அளவுக்கு வாய் பிளக்க வைக்கும். ஆனால் அன்று போல் அல்ல இந்தக் கால நடிகைகள். காதல், கல்யாணம், கர்ப்பம், பிரேக் அப், எதுவாக இருந்தாலும் அவர்களே வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர். அதனால் காஸிப் காலம் ஓய்ந்துவிட்டது. 


சரி நம்ம விவரத்துக்கு வருவோம் பாலிவுட்டின் பிரியங்கா சோப்ரா, தமிழில் ஹிட் நடிகை ஸ்ரேயா சரண் வரை யாரெல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப் பட்டனர் என்று பார்ப்போம்.


1.செலீனா ஜெட்லி பீட்டர் ஹேக்
பாலிவுட்டின் பியூட்டி செலீனா ஜேட்லி, ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் பீட்டர் ஹேக்கை திருமணம் செய்து கொண்டார். 2011ல் இவர்கள் திருமணம் நடந்தது.




2. பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ்
பிரியங்கா சோப்ரா, அமெரிக்கர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். 2018ல் இவர்களுக்கு திருமணம் நடந்தது. இவர்கள் அண்மையில் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தைக்கு பெற்றோர் ஆயினர். இவர்களின் வயது வித்தியாசம் பெரும் பேசுபொருளாகவே இருந்தது. ஆனால் அதைப்பற்றிய விமர்சனங்களை பதிலடிகளால் உதறித் தள்ளியவர் பிரியங்கா சோப்ரா.




3. ப்ரீத்தி ஜிந்தா ஜீன் குட்இனஃப்
90ஸ் கிட்ஸின் ட்ரீம் கேர்ள் ப்ரீத்தி ஜிந்தா. அவரது கன்னக்குழி அழகில் மயங்காதோர் இருப்பாரோ! பெர்க் சக்கலேட்டை இவருக்காகவே வாங்கி விழுங்கியவர்கள் ஏராளமானோர். அந்த கன்னக்குழி அழகில் மயங்கி ப்ரீத்தியை 2016ல் கரம் பிடித்தார் அமெரிக்கர் ஜீன் குட்இனஃப். மாப்பிள்ளைக்கு பேரு சோக்காத்தான் இருக்கு!




4. ஸ்ரேயா சரண் ஆண்ட்ரெய் கோஸ்சீவ்
மதுரைக்குப் போகாதடி அந்த மல்லிப்பூ கண்ணவைக்கும் வரிகளுக்குப் பொருத்தமான அழகிதான் ஸ்ரேயா சரண். அவர் ரஷ்யரான ஆண்ட்ரெய் கோஸ்சீவை கடந்த 2018ல் திருமணம் செய்து கொண்டார்.




5. ஆஸ்கா கொராடியா ப்ரென்ட் காபிள்
தொலைக்காட்சி சீரியல்களால் பிரபலமான நடிகை ஆஸ்கா கொராடியா, அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ப்ரென்ட் காபிளை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறார். அவருக்கு ராதா எனப் பெயர் வைத்துள்ளனர். ரஷ்ய மொழியில் ராதா என்றால் மகிழ்ச்சி என்று அர்த்தமாம்.