தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியின்றி தேர்வானவர்களின் விவரங்கள் என்னென்ன?
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 1374
போட்டியின்றி தேர்வானவர்கள்: 4
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 1370
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 11,196
மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியில் திமுகவைச் சேர்ந்த 4 நபர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். அதன்படி ஈரோடு மாநாகராட்சியில் ம.விஜயலட்சுமி 51ஆவது வார்டில் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். கரூர் மாநகராட்சியில் 22ஆவது வார்டில் திமுகவின் ச.பிரேமா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். வேலூரில் 7ஆவது வார்டில் வ.புஷ்பலதா மற்றும் 8ஆவது வார்டில் மா.சுனில்குமார் ஆகியோர் போட்டியின்றி வெற்றிப் பெற்றுள்ளனர்.
நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 3843
போட்டியின்றி தேர்வானவர்கள்: 18
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 3825
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 17,922
நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவியில் திமுகவைச் சேர்ந்த 15 பேரும் மற்ற கட்சிகளை சேர்ந்த 3 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி:
மொத்த பதவியிடங்கள்: 7609
போட்டியின்றி தேர்வானவர்கள்:196
தேர்தல் நடக்கும் பதவியிடங்கள்: 7412
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்: 28,660
பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியில் திமுகவைச் சேர்ந்த 101 பேரும், காங்கிரஸ் கட்சியின் 6 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், அதிமுகவைச் சேர்ந்த 12 பேரும், பாஜகவைச் சேர்ந்த 3 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளன.
மொத்தமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தமாக 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்