தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்துக் கட்சி முகவர்கள் கூடியிருக்க வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில் மதுரையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதான இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அந்த வாக்கு மையத்துக்குள் மட்டும் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி இல்லை என போலீசார் மறுத்துள்ளனர். இதனால் ஊடகத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். முறையான அனுமதி அட்டை இருந்தும் ஏன் அனுமதிக்கப்படவில்லை என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
மதுரை..
மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியும், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய மூன்று நகராட்சியும் அ.வல்லாளபட்டி, அலங்காநல்லூர், டி.கல்லுப்பட்டி பாலமேடு உள்ளிட்ட 9 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெற்றது. 100 மாமன்ற பதவிகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் 815 வேட்பாளர்களும். 3 நகராட்சிகளில் 78பதவிகளுக்கு 335வேட்பாளர்களும், 9 பேரூராட்சிகளில் 126பதவிகளுக்கு 552 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 313 பதவிகளுக்கு 1702 வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். மாவட்டத்தில் 322 பதவிகளில் பாலமேடு, வாடிப்பட்டி, டி.கல்லுப்பட்டி ஆகிய 3 பேரூராட்சிகளில் 9பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 313 பதவிகளுக்கு மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்