தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காலை முதல் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் மொத்தமுள்ள 21 மாநகராட்சியில் தி.மு.க. பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதியம் 12 மணி வரையிலான நிலவரப்படி, 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.வே முன்னிலை பெற்றுள்ளது.




சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில் தி.மு.க. 46 இடங்களில்  வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. மதுரையில் 17 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கோவையில் 15 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.  திருச்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 16 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.


சேலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 7 இடத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திருநெல்வேலியில் மொத்தமுள்ள 55 இடங்களில் 9 இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்திங் உள்ள 20 இடங்களில் 4 இடத்தில் தி.மு..கவும், 3 இடங்களில் அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளது.




ஈரோட்டில் 13 இடங்களில் தி.மு.க.வும், வேலூரில் 12 இடங்களில் தி.மு.க.வும், தஞ்சையில் 20 இடங்களிலும், திண்டுக்கல்லூரில் 12 இடங்களிலும், ஓசூரில் 17 இடங்களிலும், நாகர்கோயிலில் 12 இடங்களிலும், ஆவடியில் 7 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தாம்பரத்தில் 14 இடங்களிலும், கரூரில் 14 இடங்களிலும், கும்பகோணத்தில் 23 இடங்களிலும், கடலூரில் 11 இடங்களிலும், சிவகாசியில் 9 இடங்களிலும் தி.மு.க.வினர் வெற்றி பெற்றுள்ளனர்.


மேலும் படிக்க : TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண