கரூர் பழைய ஜெயங்கொண்டம் 3-வது வார்டு பாஜக வேட்பாளர் கோபிநாத் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட  திமுக அதிமுக வேட்பாளர்களை அவர் தோற்கடித்துள்ளார். மொத்தமாக பாஜக 174 வாக்குகள் பெற்றது. இரண்டாவது இடத்தில் திமுக 173 வாக்குகள் பெற்றது. அதிமுக மிக குறைவாக 5 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது


சோழபுரம் பேரூராட்சில் 3-வது வார்டில் தி.மு.க சார்பில் சுரேஷ், பாஜக சார்பில் கோபிநாத், அதிமுக சார்பில் தர்மலிங்கம், அமமுக சார்பில் ராமசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பாஜக வேட்பாளர் கோபிநாத் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 


முன்னதாக கடந்த அக்டோபரில் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுடன், ஏனைய மாவட்டங்களில் காலியாக இருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருடம்பாளையம் ஊராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக-வை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரு ஓட்டு மட்டுமே பெற்ற நிலையில் ஒத்த ஓட்டு பாஜக் ட்ரெண்டானது குறிப்பிடத்தகது