தமிழகத்தில்  6 வது  மாநகராட்சியாக  நெல்லை மாநகராட்சி கடந்த 1996 இல் உருவானது, குறிப்பாக நெல்லை, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர் என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மொத்தமாக 55 வார்டுகளை கொண்டது,  நெல்லை மாநகராட்சி இதுவரை 4 பொதுத் தேர்தலையும், 1 இடைத்தேர்தலையும் சந்தித்து உள்ளது, இதில் 3 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றது, 2014 க்கு பின்னர் 8 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறாத சூழலில் மீண்டும் 2022 இல் இன்று தேர்தலை சந்தித்து உள்ளது, இதில் 2006 இல் திமுக  சார்பில் ஏ.எல்.சுப்பிரமணியன் வெற்றிக்கு பின் அதிமுகவே தொடர்ந்து மேயர் பதவி வகித்து வந்தது,  இந்த சூழலில் தான் 16 ஆண்டுகளுக்கு பின் திமுக 3 வது  முறையாக மீண்டும் வெற்றி பெற்று உள்ளது,


நெல்லை மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் வெற்றி பெற்ற கட்சிகள்


திமுக - 44 இடங்களையும்,


காங்கிரஸ் - 3 இடங்களையும்,


அதிமுக - 4 இடங்களையும்,


சுயேச்சை - 1 இடத்தையும்,


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1 இடத்தையும்,


மதிமுக - 1 இடத்தையும்,


மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் - 1 இடத்தையும் பெற்றுள்ளது,




நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை யாதவர் மற்றும் பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்பதால் அந்த அடிப்படையில் தான் வாய்ப்புகளும் வழங்கப்படும், ஆரம்பத்தில் பட்டியலின  பெண்களுக்கான வார்டாக இருந்து பொது ஆண் வார்டாக மாறிய பின்னர் பிள்ளைமார், யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே வாய்ப்புகளும் வழங்கப்பட்டது,  8 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற இந்த தேர்தலில் பொது வார்டாக மாற்றப்பட்டு உள்ளது, பொது என்பதால் பிள்ளைமார் மற்றும் யாதவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே இந்த முறையும் வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது,


குறிப்பாக 17 வது வார்டை சேர்ந்த மகேஸ்வரி, 25வது வார்டு  கிட்டு என்ற ராமகிருஷ்ணன், 1 வது வார்டு கே.ராஜூ, 3வது வார்டு சுப்பிரமணியன், 40 வது வார்டு வில்சம் மணிதுரை ஆகியோரில் ஒருவர் மேயராக வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது, அதிலும் 17 வது வார்டை சேர்ந்த மகேஸ்வரி மேயராக வருவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதாவும் அதற்கு அடுத்தபடியாக கே. ராஜூவிற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது,




16 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளதால் திமுகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், குறிப்பாக மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே மேளதாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் தங்கள் வெற்றி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர், திமுகவினர் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உற்சாக வரவேற்பும் கொடுத்தனர்,


நெல்லை மாநகராட்சியில் 55 வார்டுகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:


1. கே. ராஜூ - திமுக


2. முத்துலெட்சுமி - அதிமுக


3. சுப்பிரமணியன் - திமுக


4. வசந்தா - திமுக


5. ஜெகநாதன் - திமுக


6. பவுல்ராஜ் - திமுக


7. இந்திரா - திமுக


8. மேரி - திமுக


9. சுப்புலெட்சுமி - திமுக


10. ரேவதி - திமுக


11. கந்தன் - திமுக


12. கோகுலவாணி - திமுக


13. சங்கர்குமார் - திமுக


14. கீதா - திமுக


15. அஜய் - திமுக


16. சரவணன் - திமுக


17. மகேஸ்வரி - திமுக


18. சுப்பிரமணியன் -திமுக


19. அல்லா பிச்சை - திமுக


20. ஷேக் மன்சூர் - திமுக


21. ராஜேஸ்வரி - திமுக


22. மாரியப்பன் - திமுக


23. அனார்கலி - திமுக


24. ரவீந்தர் - திமுக


25. ராமகிருஷ்ணன் - திமுக


26. பிரபா சங்கரி - திமுக


27. உலக நாதன் - திமுக


28. சந்திரசேகர் - அதிமுக


29. சுதா - திமுக


30. ஜெகநாதன் - அதிமுக


31. அமுதா - அதிமுக


32. அனுராதா - காங்கிரஸ்


33. லெட்சுமி உமாபதிசிவன் - காங்கிரஸ்


34. ஷர்மிளா - திமுக


35. பேச்சியம்மாள் - திமுக


36. சின்னத்தாய் - திமுக


37. பிரான்சிஸ் - திமுக


38. பாலம்மாள் - திமுக


39. சீதா - திமுக


40. வில்சம் மணிதுரை - திமுக


41. சங்கீதா - மதிமுக


42. பொன்மாணிக்கம் - திமுக


43. சுந்தர் - திமுக


44. முகைதீன் அப்துல்காதர் - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்


45. கதீஜா இக்லாம் பாசிலா - திமுக


46. ரம்ஸான் அலி - திமுக


47. ஷபி அமீர் பாத்து  - சுயேச்சை


48. ஆமீனா பீவி - திமுக


49. அலி சேக் மன்சூர் - திமுக


50. ரசூல் மைதீன் - திமுக


51. சகாய ஜூலியட் மேரி - திமுக


52. நித்திய பாலையா - திமுக


53. அம்பிகா - காங்கிரஸ்


54. கே.கே. கருப்பசாமி - திமுக


55. முத்து சுப்பிரமணியன் - சிபிஐ(எம்)


நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 43 இடங்களில் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி 15 இடங்களில் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது,