9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் 6,228 பேலீசார் ஈடுபட்டுள்ளனர். 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட உள்ளன. https://tnsec.tn.nic.in-இல் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 6 மற்றும் 9ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ஆகிய மாவட்டங்களில் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சியின் முதற்கட்ட தேர்தலில் 77.43 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகள் பதிவாகின. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. 2,901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27,003 பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.
மேலும், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த 789 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.
குன்றத்தூர் ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கவில்லை. உணவு, கழிவறை, குடிநீர் வசதி அடிப்படை வசதிகள் இல்லாததால் வாக்கு எண்ணும் பணியை தொடங்கமாட்டோம் என போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
7 முனைப்போட்டி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்ட நிலையில் 7 முனைப்போட்டி நிலவுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேதிமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
பேஸ்புக் பக்கத்தில் தொடர
ட்விட்டர் பக்கத்தில் தொடர
யூடிபில் வீடியோக்களை காண