Headlines Today in Tamil, 12 Oct:


தமிழ்நாடு


* 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று தொடங்குகிறது. 74 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.  வாக்கு எண்ணும் பணியில் 31,245 அலுவலர்கள், பாதுகாப்பு பணியில் 6,228 பேலீசார் ஈடுபடுகின்றனர்.


* தமிழ்நாட்டில் நேற்று 1,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.


* சென்னையில் நேற்று ஓரு லிட்டர் பெட்ரோல், 26 காசுகள் அதிகரித்து ரூபாய் 101.79க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனையாகிறது.  ஒரு லிட்டர் டீசல், 33 காசுகள் அதிகரித்து ரூபாய் 97.59க்கு விற்கப்பட்ட நிலையில், இன்றும் அதே விலையில் விற்பனையாகிறது. 


* காஞ்சிபுரத்தில் பெண்ணிடம் நகையை பறித்து விட்டு தப்பியோடி தலைமறைவான கொள்ளையர்களை காவல்துறையினர் பிடித்துள்ளனர். ஒரு கொள்ளையனை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்ற போலீசார் மற்றொரு கொள்ளையனை கைது செய்தனர். 10 தனிப்படை அமைத்து பல மணி நேர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினரிடம் கொள்ளையர்கள் பிடிபட்டது தெரியவந்துள்ளது.


* முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். வரும் அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


* தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் மற்ற நகரங்களில் இருந்து 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.


மதிமுகவில் தனது மகன் வருவதை தடுக்க தான் பல வழிமுறைகளை முயற்சித்ததாகவும், ஆனால் கட்சியின் தன்னை மீறி காரியங்கள் நடப்பதாக வைகோ பேட்டி


இந்தியா


* நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதனால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக  புகார்கள் எழுந்தன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


* ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.


உலகம்


* தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பொழுதுபோக்கு


* ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது.


* மலையாள சினிமாவின் மூத்த நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக் குறைவால் காலமானார்.


விளையாட்டு


* எலிமினேட்டர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி தோல்வியுடன் விடைபெற்றார்.


*  நாளை ஷார்ஜாவில் நடைபெற உள்ள குவாலிஃபயர் 2 போட்டியில் கொல்கத்தா அணி, டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டியில் வெல்லும் அணி வரும் 15ஆம் தேதி துபாயில் சென்னையுடன் மோதும்.


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண