தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.
2021 தமிழக சட்டப்பேரவைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும்பணி தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து, மற்ற வாக்குகள் எண்ணப்படும். 9.30 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியவரும்.
சென்னையில் 3 மையங்கள் உள்பட 75 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேலும், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தலில், 5 முனை போட்டி நிலவுகிறது.