தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.  இந்த நிலையில், தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 1,343 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் 864 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.


இதேபோல், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். 1,391 வாக்குகளுடன் முன்னிலையில் இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா செல்வராஜ் 1,345 வாக்குகளுடன் பின்னடைவில் உள்ளார்.