TN Election 2026 Chennai Candidates: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தலைநகர் சென்னையில் உள்ள தியாகராய நகர் தொகுதியை, கடைசி மாற்றமாக கைப்பற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறதாம்.

சட்டமன்ற தேர்தல் - சென்னை யாருக்கு?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், மண்டல வாரியாக குறிவைக்கப்பட்டு வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கான பலத்திற்கு ஏற்ப தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தலைநகர் சென்னையை மட்டும் தங்கள் வசமே வைத்திருக்கும் வகையில், மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே தங்கள் வசமே வைத்துள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சென்னையில் இருந்தே இயங்குவதால், இந்த பகுதியை கைப்பற்றுவதில் இரண்டு கட்சிகளும் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுக 15 மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒன்று என, சென்னை மாவட்டம் முழுவதையும் ஆளுங்கட்சியின் கூட்டணியே வென்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி தொகுதிகளுக்கான பங்கீடு

திமுக கூட்டணியில் கடந்த முறை காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட வேளச்சேரி தொகுதி மட்டுமே, மீண்டும் அந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 தொகுதிகளிலும் ஆளுங்கட்சி நேரடியாக களம் காண்கிறது. அதேநேரம், கடந்த முறை பாஜகவிற்கு 3 தொகுதிகள், பாமகவிற்கு ஒரு தொகுதி என 4 தொகுதிகளை கூட்டணிக்கு வழங்கிவிட்டு, 12 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களம் கண்டது. ஆனால், இந்த முறை கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகளை மட்டும் வழங்கிவிட்டு, 13தொகுதிகளில் நேரடியாக களம் காண முடிவெடுத்துள்ளது. அதன்படி பாஜகவிற்கு மயிலாப்பூர், அமமுகவிற்கு சைதாப்பேட்டை மற்றும் பாமகவிற்கு பெரம்பூர் ஆகிய தொகுதிகள் இந்த முறை வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பிரதான கூட்டணி சார்பில், தலைநகர் சென்னையில் களமிறங்கும் வேட்பாளகள் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சென்னை 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக கூட்டணி வேட்பாளர்கள்

எண்தொகுதிதிமுக+ வேட்பாளர்அதிமுக+ வேட்பாளர்
1ஆர்.கே. நகர்ஜே.ஜே. எபினேசன்R.S.  ராஜேஷ்
2பெரம்பூர்ஆர். டி. சேகர்பாமக
3கொளத்தூர்மு.க. ஸ்டாலின்P. சந்தானகிருஷ்ணன்
4வில்லிவாக்கம்கார்த்திக் மோகன்S.R. விஜயகுமார்
5திரு.வி.க. நகர்கே.எஸ். ரவிச்சந்திரன்பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் 
6எழும்பூர்தமிழன் பிரசன்னாஅபிஷேக் ரங்கசாமி
7ராயபுரம்சுபேர்கான்டி.ஜெயக்குமார்
8துறைமுகம்பி.கே. சேகர் பாபுராயபுரம் R. மனோ
9சேப்பாக்கம் - திருவல்லிக்கேணிஉதயநிதி ஸ்டாலின்ஆதிராஜாராம்
10ஆயிரம் விளக்குஎழிலன்வளர்மதி
11அண்ணா நகர்நே. சிற்றரசுகோகுல இந்திரா 
12விருகம்பாக்கம்பிரபாகர் ராஜாவி.என். ரவி
13சைதாப்பேட்டைமா. சுப்ரமணியன்செந்தமிழன் (அமமுக)
14தியாகராய நகர்ராஜா அன்பழகன்தி.நகர் சத்யா
15மயிலாப்பூர்தா. வேலுதமிழிசை சௌந்தரராஜன் (பாஜக உத்தேச வேட்பாளர்)
16வேளச்சேரிஅசன் மௌலானா (காங். உத்தேச வேட்பாளர்)M.K. அசோக்

12 தொகுதிகளில் வேட்பாளர்கள் யார்?

திமுக தரப்பில் சென்னையில் போட்டியிடப்போவது யார் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால், அதிமுக சார்பில் இரண்டு கட்ட வாக்காளர் பட்டியல் வெளியானாலும், ராயபுரத்தில் டி.ஜெயக்குமார் போட்டியிடுவார் என்பது மட்டுமே உறுதியாகியிருந்தது. காரணம், சென்னை மாவட்டத்தில் திமுக பலமாக இருப்பதால் அவர்களது வேட்பாளர்கள் விவரங்கள் வெளியானதும், அவர்களுக்கு போட்டியாக சரியான நபர்களை களமிறக்க எடப்பாடி பரிசீலிப்பதாக கூறப்படுகிறது. உட்கட்சி பூசலை தடுக்கும் விதமாகவும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டதாம். இதுபோக, பாஜக தரப்பில் இருந்து சென்னையில் கூடுதலாக ஒரு தொகுதியை பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில் தான், சென்னை மாவட்டத்தின் 12 தொகுதிகள் உட்பட அதிமுகவிற்கான, மீதமுள்ள 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் எடப்பாடி மூன்றாம் கட்டமாக இன்று அறிவித்துள்ளார்.

பாஜக ஏமாற்றம்

இதனிடையே, தியாகராய நகர் தொகுதியை கைப்பற்ற பாஜகவின் வினோஜ் பி. செல்வம் தரப்பு முயன்று வந்தது. இதனை வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் அண்மையில் கமலாலயம் முன்பு தர்ணாவிலும் ஈடுபட்டு இருந்தனர். இதுபோக ஆலங்குடி போன்ற தொகுதிகளை மாற்றி தரவேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகளையும் பாஜக முன்வைத்ததாம். கடந்த முறை சென்னையில் தங்களுக்கு 3 தொகுதிகளை ஒதுக்கிய நிலையில், இந்த முறை ஒன்று மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் கோரிக்கையை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டதாம். ஆனால், அவர்களது எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் விதமாக தியாகராய நகர் மற்றும் ஆலங்குடி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் எடப்பாடி அறிவித்துள்ளார்.