சிவகங்கை மாவட்டத்தில், மொபைல் செயலி மூலம் அறிமுகமானவர்களை நம்பி சென்ற இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணையில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
Grinder App மூலம் வந்த அழைப்பு
சிவகங்கை மாவட்டம் விஜயமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான மோகன்துரை களஞ்சியம், கடந்த மார்ச் 26ஆம் தேதி Grinder App மூலம் வந்த அழைப்பை நம்பி, கோசவநடப்பு கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு முன்கூட்டியே திட்டமிட்டு காத்திருந்த ஐந்து பேர், அவரை சுற்றிவளைத்து தாக்கியதுடன், மொபைல் போன், GPay ரகசிய எண், 1.5 கிராம் தங்க காதணி மற்றும் ரூ.1,500 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். மேலும், கம்பு மற்றும் கத்தியால் தாக்கியதில் காயமடைந்த மோகன்துரை, உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கு பதிவு செய்து விசாரணை
இந்த சம்பவம் குறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், லட்சுமணன், அர்ஜுனன், ஆதி, சிவா மற்றும் ரித்திக் @ கலை ஆகிய ஐந்து பேரையும் விரைவில் கைது செய்துள்ளனர். அறிமுகம் இல்லாத நபர்களின் அழைப்புகளை நம்பி தனிமையான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை