திருவண்ணாமலை நாடாளுமன்றம்:


Election Results 2024: திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்றது. தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணிக்கை என வாக்குகள் தனித் தனியாக எண்ணப்பட்டது. 24 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே, தி.மு.க., கூட்டணியின் ஆதரவு வேட்பாளர் சி.பி.எம் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். முதல் சுற்று முதல் கடைசி வரையில் அ.தி.மு.க., வேட்பாளர் கலிய பெருமாள்  2-ம் இடம் பிடித்தார். பா.ஜ.க வேட்பாளர் அஸ்வத்தாமன்  3-ம் இடத்தை பிடித்தார்.

 

2-வது முறை வெற்றி பெற்ற சி.என்.அண்ணாதுரை 


இறுதிச்சுற்றின் நிலவரப்படி 547379 வாக்குகள் எண்ணப்பட்டன, அதிமுக வேட்பாளர் கலிய பெருமாள் 3 லட்சத்து 13 ஆயிரத்து 448 ஓட்டுகளும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 650 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு 83 ஆயிரத்து 869 ஓட்டுகளும் பெற்று இருந்தனர். நோட்டாவுக்கு 11 ஆயிரத்து 438 ஓட்டுகளும் பதிவாகின.  அதன்படி அ.தி.மு.க  வேட்பாளர் கலியபெருமளை விட தி.மு.க சி.என்.அண்ணாதுரை  2 லட்சத்து 33 ஆயிரத்து 981 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

2-ம் இடத்தை அதிமுக வேட்பாளர் கலிய பெருமாள் 3 லட்சத்து 13 ஆயிரத்து 448 ஓடுகள் பெற்றார். 3-ம் இடத்தை பா.ஜ.க வேட்பாளர் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 650 பெற்றார்.  4-ம் இடத்தை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு 83 ஆயிரத்து 869 ஓடுகளும் பெற்றார். 

 

அ.தி.மு.க ஆகிய கட்சிகளை தவிர பா.ஜ.க, வேட்பாளர் அஸ்வத்தாமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ் பாபு  உட்பட 29 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்ற சிஎன். அண்ணாத்துரைக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பாஸ்கர பாண்டியன் வெற்றி சான்றிதழை வழங்கினார். இந்த சான்றிதழ் பெறும்பொழுது, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் செஞ்சி மஸ்தான், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். வெற்றி பெற்ற சி.என்.அண்ணாதுரை திருவண்ணாமலையில் உள்ள அண்ணாசிலை, கலைஞசர் சிலை, காமராஜர் சிலை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட அனைத்து சிலைக்கும்  கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்று மாலை  அணிவித்தார்