தூத்துக்குடியில் பாஜக கூட்டணி சார்பாக தமாகா வேட்பாளர் விஜயசீலன் அறிவிக்கப்பட்டுள்ளார். 


மக்களவை தேர்தல்:


மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி  ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


இதையடுத்து, அரசியல் கட்சிகள், தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன.


இதில் பாஜக கூட்டணியில் தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளது. பாஜக கூட்டணியில் மூன்று தொகுதிகள் தமாகா-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொகுதியில் விஜயகுமார் , ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 




தூத்துக்குடி தொகுதியில் திமுக கட்சி சார்பாக, தற்போது தூத்துக்குடி எம்.பி-யாக உள்ள கனிமொழி போட்டியிடுகிறார். அதிமுக கட்சி சார்பாக ஆர்.சிவசாமி வேலுமணி போட்டியிடுகிறார். 


மக்களவை தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


DMK vs AIADMK vs BJP: அனல் தெறிக்கும் தேர்தல் களம்: 40 தொகுதிகளில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் யார்?- முழு பட்டியல்