திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளும், செங்கம் புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ளது.


இந்நிலையில் வந்தவாசி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் 153 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வந்தவாசி 21-வது வார்டில் திமுகவின் கூட்டணி கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ராதாகிருஷ்ணன் வேட்பாளராக மார்க்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் அறிவித்தது. அதன் பின்னர் அவருக்கு கூட்டணி கட்சி என்பதால் அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 


 




 


 


இந்தநிலையில் இன்று கூட்டணி கட்சியினருடன் தனது 21-வது வார்டில் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குகளை சேகரிக்க சென்றார். அப்போது அப்பகுதியில் காய்கறி விற்பனை வண்டியில் அப்பகுதி பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி கொண்டு இருந்தனர். அங்கு சென்ற வேட்பாளர் காய்கறி வண்டியை தள்ளிக்கொண்டு காய்கறி வியாபாரம் செய்து கொண்டும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களின் கோரிக்கைகளையும் அறிந்தும் அவர்களிடம் வியாபாரம் செய்து கொண்டு வாக்குகளை சேகரித்தார்.


மேலும் அந்த வீதியில் நகராட்சியினர் குப்பைகளை அகற்றினார். அதன் பிறகு அங்கு சென்று நகராட்சி ஊழியர்களின் கோரிக்கைகளையும் அறிந்தும், நகராட்சி வாகனத்தை தள்ளிக்கொண்டு வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரித்து வித்தியாசமான முறையில் வாக்குகளை சேகரித்தார். உடன் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யுனிஸ்ட் கட்சியினர் உடன் வந்து வாக்குகளை சேகரித்தனர்.


 




 


தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசுகையில்; 


 வந்தவாசி 21- வது வார்டில் மழைக்காலங்களில் தண்ணீர் குட்டையாக தேங்கி நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை சரிசெய்து அப்பகுதியில் புது கால்வாய் ஏற்படுத்திடவும், கஜலட்சுமி நகர் வழியாக செல்வதற்கு குறுக்கு சாலைகள் செப்பணிகள் செய்யப்படும் என்றும், கேசவா நகரில் உள்ள இந்துமதி தெரு மற்றும் அய்யாதுரை தெரு, கமலா அம்மாள் தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் புதிய சாலைகள் அமைத்து தரப்படும் என்றும், அப்பகுதியில் சிறுவர் விளையாட்டுப் பூங்கா புதிதாக அமைக்கப்படும் என்றும் அப்பகுதியிலிருந்து வந்தவாசி புதிய பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு கால்வாய் பாதையில் பாலங்கள் அமைக்கப்படும் வெற்றி பெற்றால் இந்த வாக்குறுதிகளை செய்து முடிப்பேன் என்று கூறி வாக்குகள் சேகரித்தார் .