தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வந்தவர் நடிகை மீனா. தனது அழகிய கண்களாலும் நடிப்பாலும் பல ரசிகர்களை ஈர்த்தவர். குறிப்பாக 90 கிட்ஸ் பலரின் கனவு கன்னியாகவும் இருந்தவர் நடிகை மீனா. இவர் ரஜினி,கமல்,அஜித்,விஜய் என்ற தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.


இவர் சமீபத்தில் மலையாளத்தில் திரிஷ்யம்-2 மற்றும் பிருத்வி சுகுமாறன் இயக்கிய ப்ரோ டாடி ஆகிய படங்களில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஜோடியாக நடித்து அந்த படங்களும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நடிகர் மோகன்லாலுடன் அவர் இணைந்து நடித்த பல படங்கள் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது. மீனா பல படங்களில் மோகன்லாலுக்கு காதலியாகவும், மனைவியாகவும் நடித்துள்ளார். 


இந்தநிலையில், மோகன்லாலுடன் தான் நடித்து வந்த 25 வருடங்கள் அடங்கிய புகைப்படத்தை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 






முன்னதாக, மோகன்லாலுடன் மீனா நடித்த முதல் படம் 1984 இல் வெளியான ‘மனசரியதே’. அப்பொழுது மீனாவுக்கு கிட்டத்தட்ட 9 வயது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வாரணபாகிட்டு’, ‘உதயனனு தாரம்’, ‘திரு. பிரம்மச்சாரி', 'சந்திரோற்சவம்', 'நாட்டுராஜாவு', ‘முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்' மற்றும் 'த்ரிஷ்யம்' போன்றவை சமீபத்தில் மோகன்லாலுடன் மீனா நடித்த குறிப்பிட்ட படங்கள் ஆகும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண