திருப்போரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதுகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி சென்னையின் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது. இந்த தொகுதியில் ஆண்கள் 1,39,449 பேர், பெண்கள் 1,44,620 பேர், மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் என மொத்தம் 2,84,098 வாக்காளர்கள் உள்ளனர்.

 இதுவரை நடைபெற்ற 12 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக 7 முறையும், அதிமுக 4 முறையும், பாமக ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.



தலைநகர் சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையான ஈசிஆர் மற்றும் ஓ.எம்.ஆர் சாலைகள் இத்தொகுதியில் வருகின்றன.

 

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் ஆறுமுகம், திமுக கூட்டணியில் விசிக சார்பில் பாலாஜி, அமமுக சார்பில் கோதண்டபாணி, மக்கள் நீதி மய்யம் சார்பில் லாவன்யா, நாம் தமிழர் கட்சி சார்பில் மோகனசுந்தரி, பகுஜன் சமாஜ் சார்பில் பக்கிரி அம்பேத்கர் உட்பட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனினும், பாமக மற்றும் விசிக வேட்பாளர்களிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

 

தொகுதிக்கு போதிய அறிமுகம் இல்லாதவர் என்பது இவரது பலவீனம். எனினும், இவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கியும் இவருக்கு பலம்.



 

 சிறுபான்மையினர், வன்னியர் மற்றும் புறநகர்ப் பகுதி மக்களின் வாக்குகள் இவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. தற்போதைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் இதையவர்மனுக்கு மீண்டும் சீட்டு கொடுக்காததால் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது இது பாலாஜிக்கு பலவீனம்.

 

 

பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்திற்கு , அதிமுக மாவட்டச் செயலாளருக்கு சீட் வழங்காதால் அதிருப்தி மற்றும் அமமுக வேட்பாளர் கோதண்டபாணியின் போட்டியால் இவருக்கான வாக்கு வங்கி சிதறும் என்பது பலவீனம். எனினும், தொகுதிக்கு நன்கு அறிமுகமானவர் மற்றும் இத்தொகுதியில் ஏற்கெனவே பாமக வெற்றி பெற்றது போன்றவை பலம் சேர்க்கிறது. வன்னியர் மற்றும் மீனவ சமுதாயத்தவரின் வாக்குகள் இவருக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.

 



இரண்டு வேட்பாளர்களும் சரி சம பலத்துடன் போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது. ஆரம்பத்திலிருந்து இழுபறியாக இருந்த இந்த தொகுதியில் தேர்தலுக்கு முன்பு பாமக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தாலும். இறுதி நேரத்தில் கணிசமான அளவில் வாக்கு வங்கியைக் கொண்ட புரட்சி பாரதம் கட்சியினர் சரியாக வேலை செய்யாதது போன்ற காரணங்களால் , தற்போது திருப்போரூர் தொகுதியில் பானை பொங்குவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எது எப்படி இருந்தாலும் அரசியல் ஆய்வாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமே இந்த தொகுதி உள்ளது.