சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,


"தேர்தல் அறிவிப்பு வந்த நேரத்தை விட தற்போது இந்தியா கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. மோடிக்கு எதிராக எதிர்ப்பலை தமிழகத்தில் உள்ளது. பாஜக மீது சுனாமி வீசுவது போன்ற நிலை தமிழகத்தில் உள்ளது. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது ஒவ்வாமை கூட்டணி. பாஜகவுடன் யாரும் கூட்டணிக்கு வராத நிலையில் பாமகவின் கையை காலை பிடித்து கூட்டணிக்கு இழுத்துள்ளனர் பாஜகவினர் என தெரிவித்தார். மண்டல் கமிஷன் சிபாரிசை அமல்படுத்திய வி.பி.சிங்கின் ஆட்சியை கெடுத்தவர்கள் பாஜகவினர் என தெரிவித்தார். வர்ணாசிரமத்தை ஆதரிக்கும் கட்சியாக பாஜக உள்ளது. ஆனால் வர்ணாசிரமத்தை எதிர்க்கும் பாட்டாளி மக்கள் கட்சி எப்படி ஆதரித்தது என தெரியவில்லை.



அண்ணா திமுகவின் தேர்தல் களம் பூஜ்ஜியமாக உள்ளது. பாஜகவை எதிர்த்தும் பேச முடியவில்லை ஆதரித்தும் பேச முடியவில்லை எனவும் இரண்டாம் கட்ட நிலைமையில் அதிமுகவினர் உள்ளனர் என தெரிவித்தார். அதிமுக எடப்பாடி பழனிசாமி எதற்காக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகினார் எனவும் கூறவில்லை பாட்டாளி மக்கள் கட்சியினர் ஏன் பாஜகவுடன் சேர்ந்தார்கள் எனவும் கூறவில்லை விமர்சனம் செய்தார். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியினர் குழப்பத்திலேயே உள்ளனர் எனவும் தெரிவித்தார். இந்தியா கூட்டணி என்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என தெரிவித்த அவர், குறிப்பாக காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் நல்ல பெயரை இந்தியா கூட்டணி வரவேற்பை பெற்றுள்ளது என தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் திட்டம் கிடைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் இந்தியா கூட்டணி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நல்ல முறையில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.


பாஜகவும் அதிமுகவும் எது இரண்டாவது இடத்தில் வரும் என்பது தான் அவர்களின் போட்டியாக உள்ளது எனவும், அதிமுக பல பிரிவுகளாக உள்ளது. குறிப்பாக எடப்பாடி, டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் என பல பிரிவுகளாக அதிமுக பிரிந்துள்ளது. இதனால் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வி ஏற்படும் எனவும் தெரிவித்தார். வட மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும் எனவும், 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என மோடி கூறுவது வேடிக்கையானது எனவும், கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவினர் வெற்றி பெறவே முடியாது எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் பாஜக உடைத்து எரியும் கட்சியாகவே உள்ளது எனவும், பீகார் மகாராஷ்டிரா ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களிலும் பாஜக நினைத்த இடத்தில் வெற்றி பெற முடியாது எனவும், பீகார் மகாராஷ்டிரா முடியாது எனவும், அவர்களின் நிலைப்பாடு அவர்களுடன் கூட்டணி வைத்த பல கட்சி தலைவர்களே வெளியேறும் நிலைக்கு தான் தற்போது பாஜக உள்ளது என தெரிவித்தார்.



வட மாநிலங்களில் எதிர்பார்த்த அளவு வெற்றி பெற முடியாது எனவும், இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என தெரிவித்தார். அரசியலில் பண்பாடு கலாச்சாரத்தை மீறி தனிப்பட்ட விமர்சனத்தை வைப்பது பொருத்தமாக இருக்காது எனவும், அண்ணாமலை எந்த அரசியல் நாகரிகமும் இல்லாமல் நடந்து கொள்கிறார் என கண்டனம் தெரிவித்தார். சேலத்தில் வீரபாண்டியரை விமர்சனம் செய்த அண்ணாமலையை விமர்சனம் செய்ய அவர், பாஜகவில் தான் ரவுடிகளின் சாம்ராஜ்யம் உள்ளது. 


அரசியல்வாதிகள் செய்தியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் இழிவாக பேசும் செயலை அவர் செய்து வருவது நல்லதல்ல என தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி தான் பிரதமரை தேர்ந்தெடுக்க முடியும். தனிநபரை முதன்மைப்படுத்தி தேர்தலில் பங்கேற்பது திவாலான கட்சிகளில் தான் நடக்கும் எனவும்,தெரிவித்தார். இந்திய நாட்டின் இறையாண்மை, பன்முகத்தன்மை, போன்ற சாரம்சங்களை உள்ளடக்கி தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும், தனி நபரை மையப்படுத்தி தேர்தலை சந்திக்கக் கூடாது எனவும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுவரை பதவியேற்ற பிரதமர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த பின்பு தான் அறிவிக்கப்பட்டனர். ஆனால் பாஜகவின் மோடி தன்னை முதன்மைப்படுத்தி தேர்தலில் பங்கேற்பது வேடிக்கையானது எனவும் தெரிவித்தார். இந்தியாவில் அனைத்து மதத்தினர் சேர்ந்து ஒற்றுமையுடன் இருக்கும் நிலையை மாற்றுவது அண்ணாமலையின் இறையாமை எனவும், இந்திய அரசியல் சாசனம் என்பது உண்மையான இறையாண்மை எனவும் தெரிவித்தார். தேர்தல் கமிஷனர் எப்படி அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில் . உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிராக தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுத்துள்ளனர். இறையாண்மைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் இறையாண்மையை பற்றி பேசக்கூடாது எனவும் தெரிவித்தார்.