திமுகவினர் அண்ணா அறிவாலயத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சாலைகளில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதில், திமுக கூட்டணி 148 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 16 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களிலும், தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக 4 இடங்களிலும் முன்னிலை உள்ளது.

திமுக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பும் வழங்கியும் கொண்டாடினாகள். கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக வெற்றிக் கொண்டாடத்திற்கு தேர்தல் ஆணையம் தடைவிதிதுள்ள நிலையில், அதை மீறியுள்ளனர்.

#WATCH | DMK supporters continue to celebrate outside party headquarters in Chennai as official trends show the party leading on 118 seats so far.

Election Commission of India has banned any victory procession amid the #COVID19 situation in the country.#TamilNaduElections2021 pic.twitter.com/z6Fp5YRnKP
— ANI (@ANI) May 2, 2021

அரசின் உத்தரவையும் மீறி தொண்டர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களைத் தடுக்கத் தவறிய தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே வெற்றிக் கொண்டாட்ட தடையை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யவும், அதை தடுக்கத்தவறும் காவல் அதிகாரையை சஸ்பெண்ட் செய்யவும் 5 மாநில தலைமை செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விழிப்புடன் இருக்கவும், வெற்றிக்கொண்டாட்டத்தை தவிர்க்கவும் வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும்.

முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது.

வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். #Covid19 காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்கவும். pic.twitter.com/Lp9Lb8LkNp
— M.K.Stalin (@mkstalin) May 2, 2021

இதுதொடார்பாக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பொறுப்பாளர்கள் விழிப்புணர்வுடன்  கண்காணிக்க வேண்டும். முழு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளியே வரக்கூடாது. வெற்றிச் சான்றிதழை வழங்க காலதாமதம் செய்தால் தலைமையைத் தொடர்பு கொள்ளவும். கொரோனா தொற்று காரணமாக வெற்றிக் கொண்டாட்டத்தைத் தவிர்க்க வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.