சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் அதிமுக அமைச்சர்கள் 15 பேர் முன்னிலையில் உள்ளனர். அதிர்ச்சிகரமாக இதுவரை ஜெயக்குமார் உட்பட 8 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஐந்து மாநிலச் சட்டப்பேரவைக்கான தேர்தல் காலை 8 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்திய நிலவரப்படி, திமுக கூட்டணி கட்சிகள் 142 தொகுதிகளிலும், அஇஅதிமுக கூட்டணி கட்சிகள் 91 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுக அமோக வெற்றி பெரும் எனத் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் கடும்போட்டி கொண்டாக மாறியுள்ளது. முன்னிலை பின்னடைவு நிலை கணிக்க முடியாததாக ஆகிவருகிறது. சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் தற்போது அங்கே பின்னடைவைச் சந்தித்து வருகிறார். அதே சமயம் அதிமுகவின் அமைச்சர்கள் ஜெயகுமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், காமராஜ், பெஞ்சமின் , பாண்டியராஜன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோரும் அவர்களது தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.
ஆறுதலாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன்,செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, வேலுமணி உட்பட 15 அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.