தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 வார்டுகளில் வென்று ஒரத்தநாடு பேரூராட்சியை டிடிவி தினகரனின் அமமுக கைப்பற்றியது. 


தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 


இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 வார்டுகளில் வென்று ஒரத்தநாடு பேரூராட்சியை டிடிவி தினகரனின் அமமுக கைப்பற்றியது. இந்த பேரூராட்சியில் அதிமுக 3 இடங்களிலும், திமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 5 வார்டுகளிலும் அமமுக வெற்றி பெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொள்ளாத நிலையில் ஒரத்தநாடு பேரூராட்சி கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் அதிமுக பலம் வாய்ந்ததாக கருதப்பட்ட நிலையில் அமமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றுக்கு கடந்த 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.




TN Urban Election Results 2022 LIVE: ஜெயிக்கப்போவது யாரு? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியை கைப்பற்றுவது யார்? அடுத்தடுத்து அப்டேட் இதோ!




 






 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண