தென்காசி தொகுதியில் தி.மு.க. ராணி ஸ்ரீகுமார் 4,25,465 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.
தென் தமிழ்நாட்டில் உள்ள ஒரே தனித்தொகுதி தென்காசி. தமிழ்நாடு அரசு இலச்சினையில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம், தித்திக்கும் பால்கோவா, சங்கரன்கோவில், பொதிகை மலை சாரல், குற்றால அருவிகள் என பல்வேறு சிறப்புகளை கொண்டது இந்த தொகுதி.
தென்காசி மக்களவை தொகுதியின் வரலாறு: தென்னை, மா எலுமிச்சை, பூக்கள், அதிக அளவில் நெல் சாகுபடியால் அரிசி ஆலைகள், உள்ளாடை உற்பத்தி நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தொகுதியாக உள்ளது.
தமிழ்நாட்டின் 37வது தொகுதியான தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் என மூன்று தனி தொகுதிகளையும் ராஜபாளையம், கடையநல்லூர், தென்காசி ஆகிய 3 சட்டமன்ற பொது தொகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது.
இதில் 15 லட்சத்து 16 ஆயிரத்து ,183, பேர் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,42,158, பெண் வாக்காளர்கள்: 7,73,822 மூன்றாம் பாலினத்தவர் 203, ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண்களை விட பெண்கள் 31,664 பேர் கூடுதலாக உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் கோட்டை: கடந்த 1957இல், இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இந்த தொகுதி விளங்கி வந்துள்ளது. தொடர்ந்து ஒன்பது முறை காங்கிரஸ் கட்சியும் ஒருமுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கடுத்ததாக அதிமுக 3 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு முறையும், திமுக ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளது. தொகுதி உருவாக்கப்பட்டு 62 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ல் முதன் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் தனுஷ் எம். குமார் வெற்றி பெற்றார்.
இவருக்கு 4, லட்சத்து 76, ஆயிரத்து 156 வாக்குகள் கிடைத்தது. இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட Dr. கிருஷ்ணசாமி 3, லட்சத்து 55, ஆயிரத்து 870 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அமமுக சார்பில் போட்டியிட்ட பொன்னுத்தாய் மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட மதிவாணன் நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தென்காசி தொகுதியில் மொத்தமுள்ள 15, 25,439 வாக்குகளில் 10,58,987 வாக்குகள் பதிவாகின. இந்த முறையும் இங்கு திமுகவே களமிறங்கி உள்ளது.
அரசு மருத்துவருமான ராணி ஸ்ரீகுமார் திமுக சார்பில் போட்டியிட்டார். சங்கரன்கோவிலை சேர்ந்த இவரது கணவர் ஸ்ரீகுமார், திமுக விவசாய அணி துணை அமைப்பாளராக உள்ளார். அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிட்டார்.
பாஜக கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், நாம் தமிழர் கட்சி சார்பில் மதிவாணன் என்பவரும் போட்டியிட்டார். இவர்களுடன் சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 15 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளருக்கு இடையே கடும் போட்டி நிலவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.