தமிழ்நாட்டில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. அதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடலூரில் காணொலி காட்சி வழியாக தேர்தல் பரப்புரையை தொடங்கி இருக்கிறார். 


அப்போது பேசிய அவர், “ஏழை மாணவ மாணவிகளால் நீட் தேர்வு எழுத லட்ச கணக்கில் பணம் கட்டி பயிற்சி பெற முடியாது. பண வசதி படைத்தவர்களுக்கு கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. நீட் தேர்வை ஏற்றுக்கொண்டால், பொறியியல் கல்லூரிகளுக்கும் இது போன்ற தேர்வை கொண்டு வருவார்கள்” என தெரிவித்திருக்கிறார்.






மேலும் படிக்க: ABP Exclusive | ‛விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளாரா? எனக்கு எதுவும் தெரியாதே...’ திமுகவிற்கு ஆதரவளித்த தூத்துக்குடி மன்ற தலைவர் பேட்டி!


தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு வந்தால் பாஜகவினர் தமிழில் வணக்கம் சொல்றாங்க. ஆனால், நாம் கேட்கும் எந்த நிதி உதவியையும் மத்திய அரசு தருவதில்லை. அதனால்தான் தமிழக மக்களும் அவர்களுக்கு ‘நன்றி, வணக்கம்’ மட்டுமே சொல்கிறார்களே தவிர, வாக்களிப்பதில்லை. வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யமாட்டோம் என்ற அரசாக மத்திய அரசு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பி அனுப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 5-ந் தேதி சிறப்பு அனைத்துக்கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில், நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று சட்டமன்ற பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றது. 


இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நீட் தேர்வு மசோதாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மீண்டும் சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் விலக்கு மசோதா ஆளுநர் ஆர்.என் ரவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண