திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவை மீறி தர்மபுரி மாவட்டம் பொ. மல்லப்புரம் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார் சாந்தி. 

Continues below advertisement


தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலின் முடிவுகள் கடந்த மாதம் 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் திமுக 21 மாநகராட்சியில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் இம்மாதம் 2-ம் தேதி பதவியேற்றனர். அதனை அடுத்து, நகர்ப்புற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு இன்று தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. 



இதில், மேயர், தலைவர் உள்ளிட்ட பதவிகளை திமுக ஒரு சில இடங்களில் தன்னுடைய கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்திருந்தது. ஆனால் அந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் சிலர் தலைமையின் முடிவிற்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்ற திமுகவினர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று உத்தரவிட்டார். தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என்றும், பொறுப்பில் இருந்து விலகிவிட்டு தன்னை நேரில் சந்திக்க வேண்டும் எனவும் திமுகவினருக்கு ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். 


இந்நிலையில், பதவியை ராஜினாமா செய்யாமல் சில இழுப்பறி நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்மபுரி பொ.மல்லப்புரம் பேரூராட்சி தலைவர் பதவிக்காக திமுக கூட்டணி கட்சியான விசிகவின் சின்னவேடி போட்டியிட்டார். ஆனால், அவரை எதிர்த்து மாவட்ட திமுக பொறுப்பாளர் சாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


இது குறித்து தர்மபுரி மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணியன் நடத்திய பேச்சு வார்த்தை சுமூகமாக முடியவில்லை என தெரிகிறது. இதனால், திமுக கட்சி தலைமை அறிவிப்பை மீறி இன்னும் பதவியை ராஜினாமா செய்யாமல் இருக்கிறார் சாந்தி. மேலும், பேச்சுவார்த்தைக்கு உடன்படாத அவர், பதவியை விட்டு தரப்போவதில்லை என்பதை திட்டவட்டாமக தெரிவித்திருக்கிறார். இதனால், திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 




மேலும் படிக்க: கூட்டணி அறத்தினை முதலமைச்சர் ஸ்டாலின் காத்திட வேண்டும் - விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண