நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. குறிப்பிட்ட சில மாவட்டங்களில் திமுக தனது வெற்றியை முழுமையாக பதிவு செய்தது. அதில் ஒன்று தான் திருச்சி மாவட்டம். டெல்டா மண்டலத்தில் வரும் திருச்சியில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர் வேட்பாளர்கள் பலரையும் ஓரம்கட்டி, திமுக பெற்ற வெற்றி குறிப்பிடும் படியாக அமைந்தது. அதிமுக வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு முன் சொற்ப அளவிலான வாக்குகளே பெற்றிருந்தனர். குறிப்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு போன்ற வேட்பாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகக்குறைந்த வாக்குகளே அதிமுகவினர் பெற்றனர்.


திருச்சி மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் விபரம்


 


1.திருச்சி மேற்கு


2.லால்குடி


3.துறையூர்


4.திருவெறும்பூர்


5.மண்ணச்சநல்லூர்


6.முசிறி


7.மணப்பாறை


8.திருச்சி கிழக்கு


9.ஸ்ரீரங்கம்