2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் 3605 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் மனோஜ்பாண்டியன் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 73985. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பூங்கோதை ஆலடி அருணா 70380 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார். பனங்காட்டு படைக் கட்சியின் தலைவர் ஹரிநாடார் 37632 பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். இந்தத் தொகுதியில் 1776 நோட்டாக்கள் பதிவாகியுள்ளன.





இதுவரையிலான வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி திமுக கூட்டணி 156 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 78 இடங்களில் முன்னிலையில் உள்ளது.124 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள திமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.