தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினாலும் அதிமுக கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தின் முக்கிய பகுதியான கோவையில் அதிமுகவின் பலம் சற்றும் குறையாமல் இருந்ததை காண முடிந்தது. அமைச்சர் வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பலரும் கணிசமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். அதிமுகவின் கூட்டணியில் கோவை தெற்கில் பாஜக வேட்பாளர் வானதியும் வெற்றியை பதிவு செய்துள்ளார். கோவை மாவட்டத்தின் மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் அப்படியே அள்ளியிருக்கிறது அதிமுக. இங்கு ஒரு தொகுதியில் கூட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவில்லை. 2016ல் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


கோவை மாவட்டத்தில் உள்ள தொகுதிகள்


1.கோவை வடக்கு


2.கோவை தெற்கு


3.சிங்காநல்லூர்


4.சூலூர்


5.கவுண்டம்பாளையம்


6.தொண்டாமுத்தூர்


7.மேட்டுப்பாளையம்


8.கிணத்துக்கடவு


9.பொள்ளாச்சி


10.வால்பாறை