மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து அர்ச்சனா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

Continues below advertisement

தமிழ்நாட்டில் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் மே 6ஆம் தேதி நிறைவடையும். மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி, 5.69 கோடி வாக்காளர்கள் தமிழகத்தில் உள்ளனர்.

பெண் வாக்காளர் - 2.90 கோடி

Continues below advertisement

ஆண் வாக்காளர் - 2.78 கோடி

மூன்றாம் பாலினத்தோர் – 7,656

தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. மேலும் முதல்முறையாக static surveillance team உருவாக்கி உள்ளோம்.

வாக்காளர்கள் என்ன செய்ய வெண்டும்?

அனைத்து வாக்காளர்களும் தங்களுடைய பெயர் மற்றும் வாக்குச்சாவடி உள்ளிட்டவற்றை பூத் அளவிலான அதிகாரிகளிடம் முன்கூட்டியே உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்குச் சாவடி நிலையத்தில் மொபைல் போன் வைக்க தனிஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள், தங்கள் வேட்பு மனுக்களை மார்ச் 30  முதல் மே 6 வரை தாக்கல் செய்யலாம். தினந்தோறும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். எனினும் 31.3.26  விடுமுறை , ஏப்ரல் 3.4.26 மற்றும் 5.4 .26-ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்கள் எத்தனை பேர்?

எஸ்.ஐ.ஆருக்கு பின் 3.14 லட்சம் வாக்காளர்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

மார்ச் 26 வரை கெடு

தேர்தல் பிரசாரங்களுக்கான அனுமதியை தேர்தல் ஆணைய இணையதளம் மூலமே பெற வேண்டும். தேர்தல் ஆணையத்தின் சுவிதா (Suvidha 2.0) செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 26ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இணைய விண்ணப்பிக்கலாம்.

பிரச்சார நிகழ்ச்சிகளில் 5 ஆயிரத்துக்கு மேல் தொண்டர்கள் கூடுவதாக இருந்தால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான  ஏற்பாடுகளை செய்துள்ளோம். 50 கம்பெனி துணை ராணுவப் படை இதுவரை வந்துள்ளது'' என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.