ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி ஆர்.பாலு 7,46,683 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.


பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 


தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஸ்ரீபெரும்புத்தூர் மக்களவை தொகுதியில் திமுகவை சேர்ந்த டி.ஆர்.பாலு முன்னிலை வகித்து வருகிறார். 


ஸ்ரீபெரும்புதூர்  வாக்கு என்னபடும் குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி வளாகத்தில், தாம்பரம் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்டர்நெட் வேலை செய்யாததால் வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தாமதம் ஆகுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஸ்ரீ பெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முன்னிலை:



  1. திமுக -4,072

  2. அதிமுக - 2,091

  3. தமிழ் மாநில காங்கிரஸ் - 435

  4. நாம்தமிழர் - 892


ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளில் 5வது தொகுதி ஆகும். இத்தொகுதி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.


ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் வரலாறு: கடந்த 2008 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), ஸ்ரீபெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.


ஆனால், மறுசீரமைப்பிற்குப் பின்னர், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் ஐந்து புதிய சட்டமன்ற தொகுதிகள் சேர்க்கப்பட்டன. அதன்படி,  மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்,  பல்லாவரம் மற்றும் தாம்பரம் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. முன்பு தனித் தொகுதியாக இருந்த ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி, பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.


தமிழ்நாட்டில் உள்ள 32 பொது தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூரும் ஒன்று. பல்லவர்கள் ஆண்ட பகுதி என்ற சிறப்பை தன்னகத்தே கொண்டுள்ள இந்த தொகுதியில் தான், தமிழகத்தில் அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தொகுதியாகவும் உள்ளது.


ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், மெப்ஸ் ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. 


ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு, குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன. சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் தொகுதியாக உள்ளது. பட்டியலின சமூகத்தினர் வன்னிய சமூக மக்கள் ஏறத்தாழ சரிபாதி எண்ணிக்கையில் இருக்கின்றனர். ரெட்டியார், யாதவ சமூக மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.


வாக்காளர்கள் விவரம் (2024):


ஆண் வாக்காளர்கள் - 11,69,344


பெண் வாக்காளர்கள் - 11,88,754 


மூன்றாம் பாலினத்தவர் - 428


மொத்த வாக்காளர்கள் - 23,58,526


சட்டமன்ற தொகுதிகள் யார் வசம்?


மதுரவாயல் - கணபதி (திமுக)


அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல் (திமுக)


ஆலந்தூர் - தஅ. மோ. அன்பரசன் (திமுக)


ஸ்ரீபெரும்புதூர் - செல்வப் பெருந்தகை ( காங்கிரஸ் ) 


பல்லாவரம் - கருணாநிதி (திமுக)


தாம்பரம் - எஸ்.ஆர். ராஜா (திமுக)


2024 மக்களவை தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி ஆர்.பாலு, அதிமுக  வேட்பாளர் பிரேம்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வேணுகோபால், நாம் தமிழர் வேட்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடந்த தேர்தலில் மொத்தம் 14 லட்சத்து 36 ஆயிரத்து 25 வாக்குகள் பதிவாகின.


திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ளது.