இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டமாக நடைபெற்றது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்டப் வாக்கு பதிலில் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டு அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
சேலம் நாடாளுமன்ற தொகுதி:
சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 25 பேர் களத்தில் இருக்கிறார்கள். 1766 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 129 சுற்றுகளாக எண்ணப்பட்டு வருகிறது. இதில், ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 345 மையங்களில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாகவும், எடப்பாடி தொகுதியில் 321 மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகள் ஆகவும், சேலம் மேற்கு தொகுதியில் 297 மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுக்களாகவும், சேலம் வடக்கு தொகுதியில் 263 மையங்களில் பதிவாகன வாக்குகள் 19 சுற்றுகள் ஆகவும், சேலம் தெற்கு தொகுதியில் 241 மையங்களில் பதிவான வாக்குகள் 18 சுற்றுகள் ஆகவும், வீரபாண்டி தொகுதியில் 299 மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுலாவும் எண்ணப்படுகின்றன. இதற்காக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா 14 மேசைகள் வீதம் மொத்தம் 84 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை என்ன தனியாக ஆறு மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக நேரடியாக களம் கண்டது. திமுக சார்பில் டி எம் செல்வகணபதியும், அதிமுக சார்பில் விக்னேஷும் போட்டியிட்டனர். குறிப்பாக, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் நட்சத்திர வேட்பாளர்கள் இல்லை என்றாலும் சேலம் என்பது நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் சேலம் என்பதால் அதிமுக வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பணியில் அதிமுகவினர் ஈடுபட்டனர். இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சற்று பின்தங்கி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 10 தொகுதிகளை கைப்பற்றியது. இதன்படி தமிழ்நாட்டில் அதிமுக தோல்வி அடைந்தாலும், சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. அதன் பின்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.