✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Stock Market Today: தேர்தல் முடிவுகளால் எதிர்பாராத வகையில் சரிந்த பங்குச்சந்தை...அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்

செல்வகுமார்   |  04 Jun 2024 09:52 AM (IST)

Stock Market Today: மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில், பங்குச்சந்தைகள் இறங்குமுகத்தில் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மக்களவைத் தேர்தல் 2024: ஏற்றம்கண்ட பங்குச் சந்தை: image credits: @pixabay

மக்களவைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் தொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பங்குச் சந்தையில் தேர்தலின் தாக்கம் :

நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற்றது. இன்று தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பங்குச் சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளன. 

கடந்த சனிக்கிழமை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகியது. அதில் பாஜக அமோக வெற்றி பெறும் என தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்றைய தினமான, வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. நேற்றைய நாளின் முடிவில் சுமார் 2,500 புள்ளிகள் ஏற்றத்துடன் சென்செக்ஸ் நிறைவடைந்தது. நிஃப்டி சுமார் 750 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 

பொதுவாக நிர்வாக கொள்கைகளில் தொடர்ச்சி இருந்தால், பங்குச் சந்தை ஏற்றம் வர அதிக வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைய வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவித்த நிலையில் இருந்து பங்குச் சந்தை  நேற்று ஏற்றம் கண்டது. 

பங்குச்சந்தை நிலவரம்: 

இந்நிலையில் தேர்தல் முடிவுகள் சற்று நிச்சயத்தன்மையுடன் இருந்து வரும் நிலையில் , இந்திய பங்குச் சந்தை சற்று சரிவுடன் தொடங்கியுள்ளது.

இன்றை தொடக்கத்தில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,715.78 புள்ளிகள் குறைந்து, 74,2753 புள்ளிகளில் வர்த்தகமானது தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி  539.1 புள்ளிகள் குறைந்து 22, 724.80 புள்ளிகளில் தொடக்கத்தில் வர்த்தகமானது.

ஏற்றமடைந்த பங்குகள்:

பெரும்பாலான குறியீடுகளும், குறிப்பாக பொதுத்துறை வங்கி குறியீடுகள் 5 சதவீதம் சரிவுடன் தொடக்கத்தில் வர்த்தகமாகின. அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், எல்&டி, ஓஎன்ஜிசி மற்றும் கோல் இந்தியா ஆகியவை நிஃப்டியில் தொடக்கத்தில் அதிக நஷ்டமடைந்த நிறுவனங்களாக உள்ளன.

சரிவடைந்த பங்குகள்:

சன் பார்மா, நெஸ்லே, சிப்லா, பிரிட்டானியா மற்றும் டிவிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தொடக்கத்தில் லாபகரத்தில் உள்ளன.

தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அடுத்த என்ன நிலை வரும் என்று நிச்சயற்றத்தனையுடன் உள்ளது. எனவே, அதை பொறுத்தே இனிவரும் தருணங்களில் பங்கு சந்தை தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Published at: 04 Jun 2024 09:23 AM (IST)
Tags: Sensex NIFTy STOCK MARKET Stock Market Update Lok Sabha Election Results 2024 Elections 2024 Stock Market Today
  • முகப்பு
  • வணிகம்
  • Stock Market Today: தேர்தல் முடிவுகளால் எதிர்பாராத வகையில் சரிந்த பங்குச்சந்தை...அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.