தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 160 முதல் 170 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 58 முதல் 68 தொகுதிகளிலும், அமமுக கூட்டணி  4 முதல் 6 தொகுதிகளிலும்,  மநீம கூட்டணி 2 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என ரிபப்ளிக் தொலைக்காட்சி, சி.என்.எக்ஸுடன் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகம் 234/234:


திமுக கூட்டணி: 160 - 170
அதிமுக கூட்டணி: 58 - 68
அமமுக கூட்டணி: 4 - 6
மநீம கூட்டணி: 0 - 2
நாதக - 0
பிற - 0


தமிழகத்தில் திமுக கூட்டணி 48.91 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணி 35.05 சதவீத வாக்குகளையும் கைப்பற்றும் என்றும் ரிபப்ளிக் சேனலின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு கூறுகிறது. அமமுக கூட்டணி 6.40%, மநீம கூட்டணி 3.62%, மற்றவை 6.02% வாக்குகளைப் பெறும் என்று கணித்துள்ளது.