வி.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 4 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளில் கடந்த 6 ஏப்ரல் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றன. பாஜக கூட்டணியில் அதிமுக மற்றும் ரங்கசாமி காங்கிரஸும் , காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும் இணைந்து தேர்தலைச் சந்தித்தன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ABP மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி பெரும்பான்மையுடன் ரங்கசாமி காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 34.2 சதவிகத வாக்குகள் பெறும். ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 47.1 சதவிகித வாக்குகள் பெறும். 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸின் வாக்கு வங்கியில் 5.3 சதவிகிம் சரிவு ஏற்பட்டுள்ளது. ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 16.6 வரை உயர்ந்துள்ளது. 2016 தேர்தலில் ஒட்டுமொத்தமாக 30 சதவிகித வாக்குகள் பெற்ற இதரகட்சிகள் இந்த முறை 11.3 சதவிகிதம் வரைச் சரிவைச் சந்தித்துள்ளன.
கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 34.2 சதவிகத வாக்குகள் பெறும். ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 47.1 சதவிகித வாக்குகள் பெறும். 2016 தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸின் வாக்கு வங்கியில் 5.3 சதவிகிம் சரிவு ஏற்பட்டுள்ளது.
தொகுதிவாரி முன்னிலையில் ஒட்டுமொத்தமாக உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 6 முதல் 10 இடங்களில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி, 19 முதல் 23 தொகுதிகளில் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. இதரகட்சிகள் 1 அல்லது 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறும். தோராயமாக நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி 8 தொகுதிகளிலும் ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளிலும் வெற்றிபெறும் எனக் கணிக்கப்படுகிறது. காங்கிரஸின் வசம் இருந்த 9 தொகுதிகள் அப்படியே ரங்கசாமி காங்கிரஸ் கூட்டணியின் வசம் செல்கின்றன.இதரகட்சிகள் தோராயமாக 1 இடத்தில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.