நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது. சென்னையில் 2 வார்டுகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 5 வார்டுகளின் 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது.


சென்னை வண்ணாரப்பேட்டை 51ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 1174இல், பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் வார்டு எண் 179இல் 5059ஆம் வாக்குச்சாவடியில்  மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எந்திரம் உடைக்கப்பட்ட ஓடைக்குப்பம் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.


இதேபோல், மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17ஆவது வார்டில் உள்ள வாக்குச்சாவடிஎண் 17W-இல், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி வார்டு எண் 16, வாக்குச்சாவடி எண் 16 M, 16 Wஇல், திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி வார்டு எண் 25 வாக்குச்சாவடி எண் 57 M, 57 W இல் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.


 காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. கடைசி ஒரு மணி நேரம், அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மறுவாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு  இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படுகிறது.


தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது.  மொத்தம் 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர், 7,621 பேரூராட்சி உறுப்பினர் பதவிகள் என மொத்தமாக 12,838 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண